24 6659656b64534
இலங்கைசெய்திகள்

கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்தில் நெகிழ்ச்சி சம்பவம் – இந்திய பெண் மகிழ்ச்சி

Share

கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்தில் நெகிழ்ச்சி சம்பவம் – இந்திய பெண் மகிழ்ச்சி

காலியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்து அதிகாரியின் செயலால் இந்திய பயணி ஒருவர் நெகிழ்ச்சியடைந்துள்ளார்.

தொடருந்தின் சொகுசு பெட்டியில் பயணித்த 24 வயதான இந்திய பெண் ஒருவர் நான்கரை லட்சம் ரூபாய் பெறுமதியான மடிக்கணினி மற்றும் அதன் பாகங்கள் அடங்கிய பையை மறந்து விட்டுச் சென்றுள்ளார்.

இந்த நிலையில் அந்த பையை கண்ட தொடருந்து பாதுகாப்பு அதிகாரி, குறித்த பெண்ணை தேடி ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.

மாளிகாவத்தை தொடருந்து பாதுகாப்பு அலுவலகத்தில் பணிபுரியும் சார்ஜன்ட் கபில மாரசிங் என்பவரே இந்த முன்மாதிரிகையான செயலை செய்துள்ளார்.

மாளிகாவத்தை தொடருந்து நிலையத்திற்கு புகையிரதத்தில் வரும் போது அதனை அவதானித்த அதிகாரி பையை கொண்டு வந்து மாளிகாவத்தை தொடருந்து நிலைய உப பொலிஸ் பரிசோதகர் நந்தன பெரேராவிடம் கையளித்துள்ளார்.

இந்திய பெண் பையைத் தேடி வந்த நிலையில் அவரிடம் குறித்த பை ஒப்படைக்கப்பட்டது. பையை ஒப்படைத்ததற்காக இந்திய அதிகாரி மாரசிங்கவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த பையை மீண்டும் கண்டுபிடிப்பேன் என ஒரு நொடிகூட நினைக்கவில்லை எனவும் அதிகாரியின் இந்த நேர்மையான செயலை பாராட்டியதுடன் தொடருந்து பாதுகாப்பு படை அதிகாரிகளுடன் அவர் புகைப்படம் ஒன்றையும் எடுத்துக் கொண்டுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
MediaFile 9
செய்திகள்உலகம்

அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டோருக்குச் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தத் தடை: மனநலன் காக்க ‘ஒன்லைன் பாதுகாப்புச் சட்டம்’ அமுல்!

அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களில் கணக்குகளை ஆரம்பிக்கவோ அல்லது அவற்றைப் பயன்படுத்தவோ...

image 3268f37140
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புதுடெல்லி செங்கோட்டை அருகே சிற்றூந்து வெடிப்பு: தீவிரவாதத் தாக்குதலாகச் சந்தேகம் – 9 முதல் 13 பேர் பலி – நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிப்பு!

இந்தியத் தலைநகர் புதுடெல்லியின் வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டை (Red Fort) அருகே நேற்றிரவு இடம்பெற்ற சிற்றூந்து...

25 6908adfc6e76f
செய்திகள்இலங்கை

பாலியல் துன்புறுத்தல் மற்றும் துஷ்பிரயோகத்தைத் தடுக்க, சிறார்களுக்குப் பாலியல் கல்வித் திட்டம் அவசியம்: பிரதமர் ஹரிணி அமரசூரிய!

பாலியல் துன்புறுத்தல் மற்றும் துஷ்பிரயோகங்களில் இருந்து சிறார்களைப் பாதுகாப்பதற்காக, அவர்களுக்கு வயதுக்கு ஏற்ற பாலியல் கல்வித்...

Sri Lankas apparel export
செய்திகள்இலங்கை

ஆடைக் கைத்தொழில் துறையினர் 2026 பட்ஜெட்டை வரவேற்கின்றனர்: ஆனால் நிலையான கொள்கை அமுலாக்கம் அவசியம்!

இலங்கையின் மிகப்பெரிய தொழில்துறை மற்றும் ஏற்றுமதி வருமான ஆதாரமான ஆடைத் தொழில்துறை, 2026ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின்...