இலங்கைசெய்திகள்

கொழும்பு உட்பட ஏழு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

24 6653d84958634
Share

கொழும்பு உட்பட ஏழு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக சுமார் ஏழு மாவட்டங்களில் உள்ள பல பகுதிகளில் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த எச்சரிக்கை இன்று (27.05.2024) மாலை நான்கு மணி வரையில் நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பின்வரும் பகுதிகளுக்கு நிலை 02 எச்சரிக்கை விடுக்கப்பட்டது:

• கொழும்பு – சீதாவக பிரதேச செயலகப் பிரிவு (DSD) மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்

• களுத்துறை – இங்கிரிய, புலத்சிங்கள மற்றும் மத்துகம மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்

• கேகாலை – புலத்கொஹுபிட்டிய, தெரணியகல, ருவன்வெல்ல, கேகாலை, தெஹியோவிட்ட, வரகாபொல, யட்டியந்தோட்டை, மாவனெல்ல மற்றும் கலிகமுவ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்

• நுவரெலியா – அம்பகமுவ மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்

• இரத்தினபுரி – இம்புல்பே, பலாங்கொட, எலபாத, கலவான, கிரியெல்ல, எஹலியகொட, அயகம, இரத்தினபுரி மற்றும் குருவிட்ட மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.

பின்வரும் பகுதிகளுக்கு நிலை 01 எச்சரிக்கை

• கொழும்பு – பாதுக்க பிரதேச செயலகப் பிரிவு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்

• கம்பஹா – அத்தனகல்ல மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்

• களுத்துறை – தொடங்கொட, வலல்லாவிட்ட, அகலவத்தை, பாலிந்தநுவர மற்றும் ஹொரண மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்

• கண்டி – உடபலத மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் • கேகாலை – அரநாயக்க மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்

• நுவரெலியா – கொத்மலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் • இரத்தினபுரி – நிவிதிகல, பெல்மடுல்ல, ஓபநாயக்க மற்றும் கஹவத்த மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

Share
Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...