24 66509b59cf608
இலங்கைஉலகம்செய்திகள்

தமிழினப் படுகொலையின் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்

Share

தமிழினப் படுகொலையின் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்

முள்ளிவாய்க்கால் படுகொலையில் ஈடுபட்ட குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என பிரித்தானிய (UK) தொழிலாளர் கட்சியின் தலைவர் கீர் ஸ்டார்மர் (Keir Starmer) தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவு நாள் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில்,

“முள்ளிவாய்க்கால் நினைவு நாளான இன்று, இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களையும், பரந்த மனித உரிமை மீறல்களையும் நினைவுகூருகிறோம்.

இன்று, என் எண்ணங்கள் யாவும் பாதிக்கப்பட்டவர்கள், தப்பி பிழைத்தவர்கள், அவர்களின் அன்புக்குரியவர்கள், மற்றும் அவர்கள் அனுபவித்த கொடுமைகளால் ஏற்பட்ட வலியுடன் தொடர்ந்து வாழ்பவர்கள் நோக்கியே உள்ளது.

இறுதி போரில் காணாமல் போனவர்களை நினைவு கூர்வதுடன், அட்டூழியங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்பதை நினைவூட்டுவதாகவும் இந்நாள் இருக்க வேண்டும்.

நம் நாடு முழுவதும் உள்ள தமிழ் சமூகங்கள் இந்த புனிதமான நாளை நிதானித்து சிந்திக்கும்போது, ​​நிரந்தர அமைதி, நல்லிணக்கம் மற்றும் தமிழ் மக்களுக்கான நீண்டகால அரசியல் தீர்வை நோக்கி உழைப்பதற்கான நமது உறுதிப்பாட்டை தொழிலாளர் கட்சி மீண்டும் உறுதிப்படுத்துகிறது” என சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரித்தானிய தமிழர் பேரவையினால் (BTF)18 மே 2024 அன்று லண்டன் ரபல்கர் சதுக்கத்தில் (Trafalgar Square) முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்விற்கு பிரதான எதிர் கட்சியாகிய தொழில் கட்சியின் தலைவர் கீர் ஸ்டார்மர் (Keir Starmer) பிரித்தானிய தமிழர் பேரவைக்கு இனவழிப்பு நினைவு தின செய்தி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered 18
சினிமாசெய்திகள்

லெட்டர் எழுதி வைத்துவிட்டு வீட்டிலிருந்து வெளியேறினேன்.. விஜய் சொன்ன சுவாரசிய தகவல்

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். இவர் நடிப்பில் அடுத்ததாக...

Murder Recovered Recovered 17
சினிமாசெய்திகள்

கோமாவில் இருந்த பிரபல சீரியல் நடிகையின் தற்போதைய நிலை… இப்படி ஆகிடுச்சா?

ஐடி வேலை பார்த்து பின் விஜேவாக கேமரா முன் வந்து சீரியல் மற்றும் சினிமா நடிகையாக...

Murder Recovered Recovered 16
சினிமாசெய்திகள்

வெற்றிமாறன் படத்தில் இரட்டை வேடம்.. சிம்பு அடுத்த படத்தின் மாஸ் அப்டேட்

நடிகர் சிம்பு, தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்கள் கூட்டம் வைத்திருக்கும் பிரபலம். இவர் நடிப்பில் சமீபத்தில்...

Murder Recovered Recovered 15
சினிமாசெய்திகள்

கட்டடத் தொழிலாளியாகவே மாறிய தனம் சீரியல் நடிகை… அவரே வெளியிட்ட BTS வீடியோ

விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன் புதிய தொடராக ஒளிபரப்பாக தொடங்கிய சீரியல் தனம்....