24 664f789a67d91
உலகம்செய்திகள்

உக்ரைன் இதைச் செய்தால், பிரித்தானியா மீது தாக்குதல் நடத்தப்படும்., ரஷ்யா எச்சரிக்கை

Share

உக்ரைன்

இதைச் செய்தால், பிரித்தானியா மீது தாக்குதல் நடத்தப்படும்., ரஷ்யா எச்சரிக்கை

பிரித்தானிய ஆயுதங்களுடன் உக்ரைன் தாக்குதல் நடத்தினால், பிரித்தானிய இலக்குகளை குறிவைத்து தாக்கல் நடத்துவோம் என ரஷ்யா கூறியுள்ளது.

ரஷ்யாவிற்குள் உள்ள இலக்குகளைத் தாக்க லண்டன் வழங்கிய ஆயுதங்களைப் பயன்படுத்த உக்ரைனுக்கு உரிமை உண்டு என்று பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் டேவிட் கேமரூன் (Maria Zakharova) கூறியுள்ளார்.

இதையடுத்து, ரஷ்ய எல்லைக்குள் உக்ரைன் பிரித்தானிய ஆயுதங்களை பயன்படுத்தினால், பிரித்தானிய இலக்குகள் மீது மாஸ்கோ பதிலடி கொடுக்கும் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா எச்சரித்துள்ளார்.

அத்தகைய சூழ்நிலையில் “உக்ரைனின் எல்லை மற்றும் அதன் எல்லைகளுக்கு அப்பால்” பிரித்தானிய இலக்குகள் தாக்கப்படலாம் என்று ஜகரோவா செய்தியாளர்களிடம் கூறினார்.

ரஷ்யா ஏற்கெனவே இந்த மாத தொடக்கத்தில் இதே எச்சரிக்கையை விடுத்திருந்த நிலையில், இப்போது மீண்டும் ஜகரோவா கூறியுள்ளார்.

ரஷ்யா இவ்வாறு சீற்றத்துடன் பதிலளித்தது மட்டுமல்லாமல், உக்ரைன் எல்லையில் அணுசக்தி ஏவுகணை பயிற்சிகளை இந்த மாதம் நடத்துவதற்கு அது ஒரு காரணம் என்று குறிப்பிட்டுள்ளது.

Share
தொடர்புடையது
25 1
செய்திகள்இலங்கைவிளையாட்டு

உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் தோல்வி: கிரிக்கெட்டை முழுமையாகச் சீரமைக்க வேண்டும் – நாமல் ராஜபக்ஷ!

இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய வீழ்ச்சி குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ள நாமல் ராஜபக்ஷ, தோல்விக்கான...

24 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யுத்த கால ஊடகவியலாளர் படுகொலைகள்: உண்மைகளைக் கண்டறிய ஜனாதிபதி ஆணைக்குழு வேண்டும் – ரவூப் ஹக்கீம்!

மூத்த ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகத்தின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வு மற்றும் “பாரதி ஒரு மனிதாபிமான...

23 1
செய்திகள்அரசியல்இலங்கை

அரசியல் இருப்புக்கு போராளிகள் தேவை, ஆனால் அவர்களின் தேவைகள் புறக்கணிப்பு: சிவகுரு மதிவண்ணன் குற்றச்சாட்டு!

புனித பூமி மக்கள் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் சிவகுரு மதிவண்ணன் நேற்று (மார்ச் 1)...

22 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அவசரகால நிலையை நீட்டிக்க அரசாங்கம் பரிசீலனை!

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ, நாடு...