உலகம்
இந்தியாவில் இருந்து வெளிநாடு சென்ற குழந்தைக்கு பறவைக் காய்ச்சல்: இது இரண்டாவது சம்பவம்
இந்தியாவில் இருந்து வெளிநாடு சென்ற குழந்தைக்கு பறவைக் காய்ச்சல்: இது இரண்டாவது சம்பவம்
அவுஸ்திரேலியாவில் குழந்தை ஒன்று பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்ட நிலையில், இது அந்த நாட்டில் முதல் மனிதப் பாதிப்பு என்று தெரிவித்துள்ளனர்.
தொடர்புடைய குழந்தை முழுமையாக குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து திரும்பிய நிலையில், முன்னெடுக்கப்பட்ட சோதனையிலேயே, பறவைக் காய்ச்சல் தொடர்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சமீப ஆண்டுகளாக பறவைக் காய்ச்சல் பாதிப்பு தீவிரமடைந்து காணப்படுகிறது. பில்லியன் கணக்கான பண்ணை மற்றும் காட்டு பறவைகள் கொல்லப்பட காரணமாக அமைந்துள்ளதுடன் பல்லாயிரக்கணக்கான பாலூட்டி இனங்களுக்கும் பரவுகிறது.
இதனிடையே அவுஸ்திரேலிய சுகாதார அமைப்பு மேற்கொண்ட தீவிர விசாரணைக்கு பின்னர், மேலும் பாதிப்புகள் எதுவும் அடையாளம் காணப்படவில்லை என கூறியுள்ளனர்.
பறவைக் காச்சலானது மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு மிக எளிதாக பரவாது என்றும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவில் இதுவே முதல் பாதிப்பு என்றும் நிபுணர்கள் உறுதி செய்துள்ளனர்.
மனிதர்களுக்கோ விலங்குகளுக்கோ இதுவே முதல் முறை என்றும் தெரிவித்துள்ளனர். தொடர்புடைய குழந்தை மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது என்றும், ஆனால் தற்போது பூரணமாக குணமடைந்துள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, டெக்சாஸ் மாகாணத்தில் கால்நடை மந்தைகளில் பறவைக் காச்சல் பாதிப்பு பெருகிவரும் நிலையில், பண்ணை ஊழியர் ஒருவருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.