இலங்கைசெய்திகள்

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை மறு அறிவித்தல் வரை முடக்கம்

Share
24 664865cf7d294 1
Share

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை மறு அறிவித்தல் வரை முடக்கம்]

இந்தியா (India) – நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறை வரையான கப்பல் சேவை ஆரம்பிக்கும் திகதி மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கப்பல் சேவையினை இன்று (19.05.2024) ஆரம்பிக்கவிருந்த நிலையில் மீண்டும் பிற்போடப்பட்டுள்ளது.

கடந்த 13ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையில், சில சட்டரீதியான அனுமதிகள் உள்ளிட்ட காரணங்களால் தாமதம் ஏற்பட்டதுடன் மே 19 வரையில் கப்பல் சேவையை ஆரம்பிக்கும் நடவடிக்கைகள் பிற்போடப்பட்டிருந்தது.

இந்நிலையில், கப்பலில் காணப்படும் சில பாதுகாப்பு குறைபாடுகளை சரி செய்ததன் பின்னரே உரிய அனுமதி வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

அதேவேளை, பயணச்சீட்டுகளுக்காக முன்பதிவு செய்தவர்கள், கட்டணத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என இந்த் ஸ்ரீ எனப்பபடும் தனியார் படகுசேவை நிறுவனத்தின் முகாமைத்துவம் அறிவித்துள்ளது.

இதற்கமைய, செலுத்திய கட்டணத்தினை முழுமையாக மீளப்பெற விரும்பினால், customer.care@sailindsri.com என்ற மின்னஞ்சல் முகவரியுடன் தொடர்பு கொண்டு மீள பெற்றுக்கொள்ளலாம் எனவும் குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...