24 6646aef3a1f3c
இலங்கைசெய்திகள்

ரஷ்ய – உக்ரைன் போரின் நடுவில் இலங்கையர்கள்: ஜனாதிபதி அவசர பணிப்புரை

Share

ரஷ்ய – உக்ரைன் போரின் நடுவில் இலங்கையர்கள்: ஜனாதிபதி அவசர பணிப்புரை

ரஷ்ய – உக்ரைன் போரின் நடுவில் இருக்கும் இலங்கையர்களை விசாரிப்பதற்காக விசேட குழுவொன்றை ரஷ்யாவிற்கு அனுப்புமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்துள்ளார்.

இதன்படி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், ரஷ்யாவின் முன்னாள் தூதுவர் மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று உடனடியாக ரஷ்யாவிற்கு அனுப்பப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நிலையான நாட்டிற்கு ஒரு வழி என்ற தொனிப்பொருளில் நேற்று (16) ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

தற்போது வெளிவிவகார அமைச்சும், பாதுகாப்பு அமைச்சும் இணைந்து ரஷ்ய – உக்ரைன் போருக்கு மத்தியில் இருக்கும் இலங்கையர்களின் கணக்கெடுப்பை நடத்தி வருகின்றன.

சுற்றுலா விசாவில் இலங்கையர்கள் சிலர் ரஷ்யாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. மேலும், அவர்களில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் நாட்டின் முப்படைகளை பிரதிநிதித்துவப்படுத்தி ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

ரஷ்யாவிற்கு எத்தனை பேர் சென்றிருக்கிறார்கள் என்பது முக்கிய பிரச்சினையாகவுள்ளதுடன், அதிகாரப்பூர்வமற்ற ஆதாரங்களின்படி, ரஷ்யாவில் 600-800 க்கு இடையில் இலங்கையர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சில நேரங்களில் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருக்கலாம்.

எவ்வாறாயினும், அரசாங்கம் என்ற வகையில், நாட்டின் ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள் தொடர்பாக எடுக்க வேண்டிய ஒவ்வொரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்பட்டுள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

ரஷ்யாவில் போரில் ஈடுபட்ட இலங்கையர்கள் பற்றி தகவல் தெரிவித்த ஊடக நிறுவனங்களுக்கு சிறப்பு நன்றி. மேலும், இவர்கள் ரஷ்யாவில் தங்கியிருக்கும் பகுதிகள் குறித்த தகவல்கள் இல்லாததால் சில சிக்கல்கள் உள்ளன

ரஷ்ய குடியுரிமை வழங்குவது போன்ற பொய்யான வாக்குறுதிகளை அளித்து கடத்தல்காரர்கள் இவர்களை ரஷ்யாவிற்கு அழைத்து சென்றுள்ளதாக எமக்கு கிடைத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது முற்றிலும் மனித கடத்தல். இந்த கடத்தலில் இராணுவ உயர் அதிகாரி ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

உண்மையான நிலைமையை சுட்டிக்காட்டி ரஷ்யாவிற்கு ஆட்களை அனுப்புவது நிறுத்தப்பட வேண்டும். அதன் பின்னர், அங்கு சென்றுள்ளவர்கள் இராஜதந்திர மட்டத்தில் கலந்துரையாடப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்படுவார்கள் என நம்பப்படுகிறது.

அரசாங்கம் என்ற ரீதியில் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். வெளிவிவகார அமைச்சர் வெளிநாட்டில் இருந்தாலும் ரஷ்ய – உக்ரைன் போரின் நடுவே இருக்கும் இலங்கையர்கள் குறித்து விசாரணை நடத்த தூதுக்குழுவொன்றை ரஷ்யாவுக்கு அனுப்புமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

இதன்படி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், ரஷ்யாவின் முன்னாள் தூதுவர் உள்ளிட்ட வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று ரஷ்யாவுக்கு அனுப்பப்படவுள்ளது. இது குறித்து ரஷ்ய தூதரகத்துக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
MediaFile 11
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கிராம அலுவலர் மீதான தாக்குதல் வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் ஆட்பிணையில் விடுதலை!

கிளிநொச்சி – பரந்தன் பகுதி கிராம அலுவலர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் வழக்கில், நாடாளுமன்ற...

images 6 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இயக்கச்சியில் விபத்து: மாற்றுத்திறனாளியை மோதிவிட்டுத் தப்பியோடிய வாகனம் – ஒருவர் படுகாயம்!

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சி பகுதியில், மாற்றுத்திறனாளி ஒருவரின் மோட்டார் வண்டியைப் பின்னால் இருந்து மோதி...

MediaFile 10 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ராஜகிரியவில் 300 புதிய வீட்டு அலகுகள்: தடைப்பட்டிருந்த திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி!

ராஜகிரிய, ஒபேசேகரபுர பகுதியில் நீண்டகாலமாகத் தடைப்பட்டிருந்த 300 வீட்டு அலகுகளை நிர்மாணிக்கும் பணிகளைப் புதிய ஒப்பந்தக்காரர்...

Dark AI e1756568647595
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தெஹிவளை ஹோட்டல் உரிமையாளர் கொலை: AI தொழில்நுட்பத்தில் உருவான சந்தேக நபரின் புகைப்படம் வெளியீடு!

தெஹிவளை பகுதியில் ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை அடையாளம்...