24 664576d855e7c
இலங்கைசெய்திகள்

பால்டிமோர் கப்பல் விபத்து : 50 நாட்களாக கப்பலுக்குள் இந்திய மற்றும் இலங்கை பணியாளர்கள்

Share

பால்டிமோர் கப்பல் விபத்து : 50 நாட்களாக கப்பலுக்குள் இந்திய மற்றும் இலங்கை பணியாளர்கள்

அமெரிக்க பால்டிமோரில் (America – Baltimore) தொழில்நுட்ப பிரச்சினையால் சரக்குக் கப்பல் கடல் பாலத்தில் மோதிய சம்பவம் இடம்பெற்று 50 நாட்களாகியும், சரக்கு கப்பலில் உள்ள பணியாளர்கள் தொடர்ந்தும் கப்பலிலேயே தங்கவைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்திய மற்றும் இலங்கை பணியாளர்களான இந்த 21 பேரும் விசாரணை செய்யப்பட்ட நிலையில், அவர்களின் தொலைபேசிகளும் அமெரிக்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

முன்னதாக குறித்த சம்பவத்தில் உயிரிழந்த 06 கட்டுமானத் தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த பேரழிவுக்கு கப்பல் பணியாளர்கள் தனிப்பட்ட ரீதியில் பொறுப்பேற்கவேண்டும் என்று சிலர் வலியுறுத்தி வருகின்றமை தொடர்பில் பணியாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இதன் காரணமாக இவர்களில் சிலரின் மனவுறுதி புரிந்துகொள்ளக்கூடிய வகையில் குறைந்துள்ளதாக கடற்படையினரை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

Share
தொடர்புடையது
articles2FSjIn8EoqvQGDicvUvLR1
செய்திகள்இலங்கை

திரிபோசா உற்பத்திக்கு வலுசேர்க்கும் புதிய திட்டம்: 10 மில்லியன் டொலர் நிதியுதவியில் 7,500 விவசாயிகள் பயன்பெறுவர்!

இலங்கையில் திரிபோசா (Thriposha) உற்பத்திக்கான மூலப்பொருளான சோளத்தின் தரத்தை மேம்படுத்தவும், விநியோகச் சங்கிலியைப் பலப்படுத்தவும் புதிய...

tunel
செய்திகள்இலங்கை

கண்டி – யாழ்ப்பாணம் வீதியில் புதிய சுரங்கப் பாலம்: 699 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்க அமைச்சரவை அனுமதி!

கண்டி – யாழ்ப்பாணம் பிரதான வீதியில் (A-009) நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், மஹையாவ...

articles2FzixoDT3CyssagQNOiIL2
செய்திகள்இலங்கை

அம்பாறையில் பரபரப்பு: பாடசாலைக்கு அருகில் கைக்குண்டு மீட்பு – விசேட அதிரடிப்படையினர் குவிப்பு!

அம்பாறை மாவட்டம், சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீரச்சோலை பகுதியில் உள்ள பாடசாலைக்கு அருகாமையில் வெடிக்காத நிலையிலிருந்த...

26 69589bb718127
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தம்பலகாமத்தில் குரங்கு தாக்குதல்: பள்ளிவாசல் பணியாளர் உட்பட இருவர் காயம்.

திருகோணமலை, தம்பலகாமம் – அரபா நகர் பகுதியில் நிலவும் குரங்குகளின் அட்டகாசம் காரணமாக பொதுமக்கள் பெரும்...