இலங்கை
சுவ செரிய அவசர சேவைக்கு உந்துதல் தேவை
சுவ செரிய அவசர சேவைக்கு உந்துதல் தேவை
இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும், இந்தியாவின்(India) திட்டமான, அவசர நோயாளர் காவு வண்டி வலையமைப்பின் மூலம் இதுவரை தொலைதூரப் பகுதிகள் உட்பட சுமார் 82 இலட்சம் அழைப்புகள் மற்றும் 19 இலட்சம் மருத்துவ அவசரநிலைகளுக்கு பதிலளிக்கப்பட்டுள்ளது என இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும் இந்த நோயாளர் காவு வண்டி சேவையில் இயங்கும் 322 வாகனங்களில், 50 க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஊழியர்கள் வெற்றிடங்கள் அல்லது பழுதுபார்ப்பதில் தாமதம் காரணமாக தற்போது இயங்காமல் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில், இந்தியா வழங்கிய இலவச நோயாளர் காவு வண்டி சேவை, எட்டு ஆண்டுகளாக நாடு முழுவதும் அத்தியாவசியமான மருத்துவமனைகளுக்கு முன்னதான அவசர சிகிச்சைகளை வழங்கி வருகிறது.
இந்தநிலையில் ஒரு பொது சுகாதார நிபுணரின், அண்மைய சமூக ஊடக இடுகையின் மூலம் இந்த வலையமைப்புக்கு முக்கியமான உந்துதல் ஆதரவு தேவைப்படுவது தெரியவந்துள்ளது.
கொழும்பில் உள்ள அரசாங்க வைத்தியசாலையில் பணிபுரியும் வைத்தியரான யசுனி மாணிக்ககே, நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் 51 வயதுடைய நபரின் திடீர் மரணம் தொடர்பில் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.
“தாம் 1990 என்ற அவசர நோயாளர் காவு வண்டி சேவைக்கு அழைப்பு விடுத்தபோதும், வாகனங்கள் எதுவும் அருகில் இல்லை
எனவே தமது இல்லத்தில் உள்ளவரை காப்பாற்ற முடியவில்லை.
இந்தநிலையில் சுவசேரியா 1990 சேவைக்கு நிதியளிப்பதற்கும் உயிர்களைக் காப்பாற்றுவதும் ஏன் இலங்கை அரசாங்கம் முன்னுரிமை வழங்கவில்லை” என்று யசுனி மாணிக்ககே பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார்.