Connect with us

உலகம்

கனடாவில் தற்காலிக விசாவில் உள்ள தமிழர்களுக்கு மகிழ்ச்சி தகவல்

Published

on

24 6643602d21b2f

கனடாவில் தற்காலிக விசாவில் உள்ள தமிழர்களுக்கு மகிழ்ச்சி தகவல்

கனடாவில் தற்காலிக விசாவில் உள்ள பலருக்கு நிரந்தர குடியுரிமை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர் தெரிவித்துள்ளார்.

கனடாவில் தற்காலிக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்காக நிரந்தர வதிவிட நிலையை அதிகரிப்பதே இதற்கான சிறந்த தீர்வு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெரும்பாலானவர்கள் இதில் உள்ளடக்கப்படவுள்ள போதிலும் சிலர் தவிர்க்கப்படுவார்கள் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மார்க் மில்லர் புதிய தற்காலிக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையில் வரம்புகளை நிர்ணயிப்பதற்கான திட்டத்தை அறிவித்ததிலிருந்து முதல் முறையாக தனது மாகாண மற்றும் பிராந்திய அதிகாரிகளை அமைச்சர் சந்தித்துள்ளார்.

வீட்டுச் சந்தை மற்றும் பிற சேவைகள் மீது ஏற்படுத்தியுள்ள அழுத்தத்தை குறைப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கனடாவிலுள்ள தற்காலிக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையை ஐந்து சதவீதமாக குறைக்க திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தற்காலிக குடியிருப்பாளர்கள் நாட்டில் தங்குவதற்கு விண்ணப்பிப்பதால், புதிய திட்டத்திற்கு அமைய அவர்கள், மாகாண குடியேற்ற திட்டங்களுக்கு கூடுதல் தேவையை உருவாக்கும் என பல அமைச்சர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில் தற்காலிகமாக வசிப்பவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக புதிய விசாக்களில் அமைக்க வேண்டிய வரம்புகளை அரசாங்கம் இன்னும் தீர்மானிக்கவில்லை.

எதிர்வரும் நாட்களில் அது தொடர்பான தகவல்கள் வெளியிடப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

ஜோதிடம்

Rasi Palan new cmp 23 Rasi Palan new cmp 23
ஜோதிடம்2 மணத்தியாலங்கள் ago

​இன்றைய ராசி பலன் 03 ஜூலை 2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலனை (ஜூலை 3, 2024 புதன் கிழமை) இன்று சந்திரன் பகவான் ரிஷப ராசியில் கிருத்திகை, ரோகிணி நட்சத்திரத்தில் பயணிக்க உள்ளார். இன்று மரண...

4 3 4 3
இலங்கை20 மணத்தியாலங்கள் ago

முகத்திற்கு பயன்படுத்தப்படும் கிரீம் விற்று சொகுசு கார் வாங்கிய நடிகை – இலங்கை CID விசாரணை

நடிகை பியுமி ஹன்சமாலி (Piumi Hansamali), சந்தேகத்திற்கிடமான முறையில் சொத்து சேர்த்ததாக கூறப்படும் விசாரணை தொடர்பான வாக்குமூலத்தை பதிவு செய்வதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) சட்டவிரோத...

3 3
இலங்கை22 மணத்தியாலங்கள் ago

அரசியல் கட்சிக்கான இலவச விமான பயணச்சீட்டு : ரணிலின் அறிவிப்பு

சர்வதேச நாணய நிதியத்திடம் மாற்று யோசனை முன்வைக்கும் அரசியல் கட்சிக்கு இலவச விமான பயணச்சீட்டு வழங்கத் தயார் என அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) அறிவித்துள்ளார்....

2 1 2 2 1 2
செய்திகள்22 மணத்தியாலங்கள் ago

2024 இற்கான பிரபலமான விளையாட்டு நட்சத்திரம் : இலங்கை வீரருக்கு கிடைத்த விருது

இலங்கை (Sri Lanka) கிரிக்கட் வீரர் மதீஷ பத்திரணவிற்கு (Matheesha Pathirana) இந்தியாவில் (India) பிஹைன்ட்வுட்ஸ் கோல்டன் ஐகொன் விருது வழங்கும் நிகழ்வில் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்திய...

tamilni 1 tamilni 1
இலங்கை22 மணத்தியாலங்கள் ago

ஹிருணிகா பிரேமச்சந்திர சார்பில் பிணை மனு தாக்கல்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

கொழும்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவின் விசாரணை ஜூலை 4 ஆம் திகதிக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால்...

Rasi Palan new cmp 25 Rasi Palan new cmp 25
செய்திகள்1 நாள் ago

இன்றைய ராசி பலன் 02 ஜூலை 2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலனை (ஜூலை 2, 2024 செவ்வாய்க் கிழமை) இன்று சந்திரன் பகவான் மேஷ ராசியில் பரணி, கிருத்திகை நட்சத்திரத்தில் பயணிக்க உள்ளார். இன்று சித்த...

Rasi Palan new cmp 10 Rasi Palan new cmp 10
ஜோதிடம்3 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் 30.06.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 30.06.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசி பலனை (ஜூன் 30, 2024 ஞாயிற்று கிழமை)...