24 663af0f7d0e9d
இலங்கைசெய்திகள்

சுற்றுலா பயணிகளினால் வீசா நிறுவனத்திற்கு கிடைக்கவுள்ள பல கோடி ரூபா

Share

சுற்றுலா பயணிகளினால் வீசா நிறுவனத்திற்கு கிடைக்கவுள்ள பல கோடி ரூபா

வெளிநாட்டுப் பயணிகளிடமிருந்து மேலதிகமாக 25 டொலர்களை அறவிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்தில் 25 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தர இருப்பதாக எதிர்வுகூறப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு வீசா வழங்கும் குறித்த தனியார் வெளிநாட்டு நிறுவனத்திற்கு மாத்திரம் 6 கோடி 25 இலட்சம் அமெரிக்க டாெலர் கிடைக்கப்பெறும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (07) உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாட்டில் ஊழல் மாேசடிகள் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் எமது நாட்டுக்குப் புதிய முறைமை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், நாட்டுக்குள் வரும் வெளிநாட்டவர்களுக்கான வீசா வழங்குவதில் பாரிய மோசடி இடம்பெற்று வருவது தொடர்பில் கடந்த சில தினங்களாக ஊடகங்களில் தலைப்புச் செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

இது தொடர்பில் அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கின்றது. சுற்றுலாப் பயணிகளிடமிருந்து மேலதிகமாக 25 டொலர்களை அறவிட அரசு நடவடிக்கை எடுத்திருக்கின்றது.

இந்த வருடத்தில் 25 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தர இருப்பதாக எதிர்வு கூறப்பட்டிருக்கின்றது.

இவ்வாறு சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்தால் அவர்களுக்கு வீசா வழங்கும் குறித்த வெளிநாட்டு தனியார் நிறுவனத்துக்கு அதன் மூலம் மாத்திரம் 6 கோடி 25 இலட்சம் அமெரிக்க டாெலர் கிடைக்கப்பெறுகின்றது. அதாவது இலங்கை ரூபாவில் 1875 கோடி ஆகும்.

தற்போது இடம்பெற்று வரும் மத்திய வங்கி மோசடியை விட பல மடங்கு வீசா மோசடி அதிகம்.

அத்துடன் இந்த வீசா சேவையை எஸ்.எல்.டி. மொபிடல் நிறுவனம் குறித்த நிதியில் நூற்றுக்கு நான்கு வீதத்தைப் பெற்றுக்கொண்டு வழங்குவதற்கு தயாராகவிருந்தது.

இந்நிலையில், வேறு வெளிநாட்டு நிறுவனமொன்றுக்கு இவ்வாறான பாரிய நிதியைச் செலுத்துவதால் இந்த பணம் யாருடைய பைகளுக்கு செல்கின்றது.” என்றும் ஹக்கீம் கேள்வி எழுப்பியுள்ளார்.

Share
தொடர்புடையது
images 7
செய்திகள்இலங்கை

தேசிய பயிற்சி ஆணைக்குழுக்களில் தமிழ் மாணவர்களைத் தக்கவைக்க: அடுத்த வருடம் முதல் தமிழ் மொழி ஆசிரியர்கள் நியமனம்!

தேசியப் பயிற்சி மற்றும் தொழில்துறைப் பயிற்சி ஆணைக்குழுக்களில் (National Training and Industrial Training Commissions)...

27f94221 21fe 4856 affc d708e18f170d 1
செய்திகள்இலங்கை

கதிர்காமம் அரச மரத்தில் ஏறி இடையூறு விளைவித்த இளைஞன் கைது!

கதிர்காமம் தேவாலயத்திற்குப் பின்னால் உள்ள அரச மரத்தில் ஏறி இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டதாகக் கூறப்படும்...

25 6909c0c4a949f
இலங்கைஅரசியல்செய்திகள்

பெண்களை வர்ணிக்கும் உறுப்பினர்கள் குறித்து ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்: சாமர சம்பத் தசநாயக்க வலியுறுத்தல்!

பெண்களை வர்ணிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களை உடனடியாகக் கட்சியில் இருந்து நீக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர்...

24 66d9471ee7f32
செய்திகள்அரசியல்இலங்கை

பத்திரிகை ஆசிரியர் விசாரணை: ஊடக அடக்குமுறைக்கு எதிராக நாமல் ராஜபக்ஷ கண்டனம்!

‘அருண’ பத்திரிகையின் தலைமை ஆசிரியர் மஹிந்த இலேபெருமவை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) அழைத்தது, ஒட்டுமொத்த...