23 64da3a3a6ad88
சினிமாபொழுதுபோக்கு

நடிகர் விஜய்யிடம் பிடிக்காத ஒரு விஷயம், ஓபனாக கூறிய நடிகை த்ரிஷா- என்னது தெரியுமா?

Share

நடிகர் விஜய்யிடம் பிடிக்காத ஒரு விஷயம், ஓபனாக கூறிய நடிகை த்ரிஷா- என்னது தெரியுமா?

ஒரு ஜோடி ஹிட்டானால் அவர்களை அடுத்தடுத்த படங்களில் காண ரசிகர்கள் ஆசைப்படுவார்கள்.

அப்படி தமிழ் சினிமாவில் விஜய்-த்ரிஷா இணைந்து நடிக்க வேண்டும் என ஆசைப்படும் ரசிகர்கள் பலர் உள்ளார்கள். இவர்கள் இருவரும் இணைந்து கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி சமீபத்தில் லியோ என இணைந்து நடித்துள்ளனர்.

அண்மையில் தரணி இயக்கத்தில் விஜய்-த்ரிஷா நடிப்பில் வெளியான கில்லி படம் ரீ-ரிலீஸ் ஆகி பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

கில்லி படம் திரையரங்குகளில் வெற்றிநடைபோட்டு வரும் நிலையில் தற்போது நடிகை த்ரிஷாவின் பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

அதில் அவர் விஜய் பற்றி பேசியதாவது, படப்பிடிப்பு இடைவேளையில் விஜய் பெரும்பாலும் அமைதியாக இருப்பார், யாரிடமும் பேச மாட்டார்.

ஷுட் முடிந்தால் போதும் ஒரு சேரை எடுத்துப் போட்டுக்கொண்டு சுவருக்கு பக்கத்தில் அமர்ந்து அதையே பார்த்துக்கொண்டிருப்பார்.

சில சமயம் அவர் அமைதியாக இருப்பதை பார்த்தால், ஏதோ நாம் தவறு செய்துவிட்டோமோ என்றுகூட தோன்றும், அவரது அந்த அமைதி எனக்கு சுத்தமாகவே பிடிக்காது என கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
30 5
பொழுதுபோக்குசினிமா

விழுப்புரம் அதிமுக கூட்டத்தில் சர்ச்சை பேச்சு: நயன்தாராவை இழுத்து விமர்சித்ததால் பரபரப்பு!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அடுத்த...

13 15
சினிமாபொழுதுபோக்கு

மீண்டும் திரைக்கு வரும் ‘தாம் தூம்’: ரவிமோகன் – கங்கனா ரனாவத் கூட்டணியின் பிளாக்பஸ்டர் ரீ-ரிலீஸ்!

இயக்குநர் ஜீவாவின் இயக்கத்தில் கடந்த 2008-ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற ‘தாம் தூம்’...

04 16
பொழுதுபோக்குசினிமா

ஆஸ்கர் மேடையில் தமிழ் மின்னல்: ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்த சரித்ரா சந்திரன்!

ஹொலிவூட் திரையுலகின் உயரிய விருதான 2026 ஆஸ்கர் விருது விழா, இந்த ஆண்டு ஒரு தமிழ்...

03 17
பொழுதுபோக்குசினிமா

சர்ச்சைகளும் நெகிழ்ச்சியும்: மீண்டும் வைரலாகும் நடிகர் பார்த்திபனின் மேடைப் பேச்சு!

நடிகரும் இயக்குநருமான பார்த்திபன், தனது தனித்துவமான பேச்சால் எப்போதும் சமூக வலைத்தளங்களில் விவாதங்களை உருவாக்குபவர். சமீபத்தில்...