saipallavi a11102021
சினிமாசெய்திகள்

அதிக பருக்களாக இருந்த தனது முகம் பளபளக்க என்ன காரணம்- சாய் பல்லவி சொன்ன சீக்ரெட்

Share

அதிக பருக்களாக இருந்த தனது முகம் பளபளக்க என்ன காரணம்- சாய் பல்லவி சொன்ன சீக்ரெட்

சாய் பல்லவி, மலர் டீச்சராக தமிழ், தெலுங்கு, மலையாளம் சினிமா ரசிகர்களின் மனதில் பெரிய இடத்தை பிடித்தவர்.

பிரேமம் படம் அவருக்கு கொடுத்த ரீச் தமிழ், தெலுங்கை தாண்டி இப்போது பாலிவுட் வரை சென்றுள்ளார். பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கானின் மகனுடன் ஒரு படம் நடித்து வருகிறார்.

அதோடு பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இராமாயணம் கதையில் ராமராக ரன்பீர் கபூர் நடிக்க சீதையாக சாய் பல்லவி நடித்து வருகிறார். படப்பிடிப்பு எடுக்கப்பட்ட ஒரு புகைப்படமும் சமூக வலைதளத்தில் லீக் ஆகி வைரலானது.

நடிகை சாய் பல்லவி பிரேமம் படத்தில் நடிக்கும் போது அவரது முகத்தில் நிறைய பருக்கள் இருக்கும், அதுதான் அவருக்கு பட வாய்ப்பு கிடைக்க ஒரு முக்கிய விஷயமாகவே அமைந்தது.

ஆனால் இப்போது பருக்கள் மொத்தம் காணாமல் போனது, முகமும் நல்ல பளபளப்பாக உள்ளது. அண்மையில் ஒரு பேட்டியில் அவர், எனது முகம் பளபளப்பாக பருக்கள் இல்லாமல் மாற நான் என்ன செய்தேன் என கேட்கிறார்கள்.

டீன் ஏஜ் பெண்களுக்கும், இளம் ஆண்களுக்கும் முகப்பரு வருவது சாதாரண விஷயம். இதற்காக பயப்பட வேண்டாம், எந்த சிகிச்சையும் எடுக்க வேண்டாம்.

அதுவாக வரும் அதுவாக போய்விடும், நான் எதுவும் செய்யாமல் இருந்தது தான் என் முக பளபளப்பிற்கு காரணம் என கூறியுள்ளார். அதேபோல நீளமான முடியின் ரகசியம் கற்றாழை தான் என்றும் தெரிவித்துள்ளார்.

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...