Rasi Palan new cmp 17 scaled
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் – 30.04.2024-Horoscope Today, 30 April

Share

இன்றைய ராசி பலன் – 30.04.2024-Horoscope Today, 30 April

நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் முன்னெச்சரிக்கை போல் சில செயல்களை திட்டமிட்டு நடந்து கொள்ள, நினைத்த செயல்கள் வெற்றி பெறும். கிரக நிலைக்கு ஏற்ப ராசி பலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், உங்களுக்கான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.இங்கு மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்…

மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் சாதகமான நாளாக இருக்கும். நீண்ட நாட்களுக்குப் பிறகு ஆரோக்கியம் மேம்படும். செலவுகள் குறையத் தொடங்கும், இது ஓரளவு நிம்மதியைத் தரும். குடும்பத்தில் மரியாதை கூடும். நீங்கள் எதையாவது குறித்து கவலை ஏற்படலாம். காதல் வாழ்க்கையில் மிகவும் இனிமையானதாக இருக்கும். இன்று திருமணமானவர்களின் இல்லற வாழ்வில் மகிழ்ச்சியான தருணங்கள் இருக்கும்.

ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று உணர்ச்சிவசப்படக்கூடிய நாளாக இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் கவனம் செலுத்த வேண்டிய நாள். பணியிடத்தில் சில பொறுப்புகள் அதிகரிக்கும். உடல் நலம் சற்று கவலைத் தரும். குடும்பத்தின் இளைய சகோதரரின் நட்பு கிடைக்கும். காதலில் இனிமை இருக்கும். கடின உழைப்பு நற்பலனைத் தரும்.

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று சுமாரான பலன்கள் கிடைக்கும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டு. பொழுதுபோக்கு விஷயங்களில் அதிகம் கவனம் செலுத்துவீர்கள். காதல் தொடர்பாக சில மனக்கவலைகள் ஏற்படும். திருமண வாழ்வில் அனுசரித்துச் செல்வது அவசியம். உடல்நிலையில் சில பிரச்னைகள் வர வாய்ப்புள்ளது. வேலை தொடர்பாக அலைச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது.

கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று சுமாரான பலன் தரும் நாளாக இருக்கும். சமூகப் பணியில், பல விஷயங்கள் ஒரே நேரத்தில் சிந்திக்க வேண்டியதாகவும், சற்று உணர்ச்சிவசப்பட வேண்டியதும் இருக்கும். பேச்சில் நிதானமில்லாவிட்டால் குடும்பத்தில் தேவையற்ற சச்சரவுகள் ஏற்படலாம். காதலில் சில பிரச்னைகள் உண்டாக வாய்ப்புள்ளது. உத்தியோகத்தில் நல்ல ஒத்துழைப்பு கிடைக்கும்.

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று சாதகமாக இருக்கும். பணிகளில் மன உறுதியுடன் செயல்படுவீர்கள். சமூகப் பணி உங்கள் புகழையும், மரியாதையையும் அதிகரிக்கும். சில வேலைகளின் பாராட்டும் வெகுமதியும் பெறலாம். கடின உழைப்பு சிறப்பான பலனைத் தரும். உங்கள் திட்டங்களால் வியாபாரமும் வெற்றியடையும். லாபமும் கிடைக்கும். செலவுகள் சற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது என்பதால் கவனமாக இருக்கவும். திருமண வாழ்க்கை சில சச்சரவுகள் ஏற்படும். உங்கள் துணையிடம் நிதி உதவியை நாடலாம்.

கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று சிறப்பான நாளாக இருக்கும், உங்கள் ஆரோக்கியம் மேம்படும். வேலை சம்பந்தமாக அதிக கவனம் தேவை. குடும்பச் சூழல் சற்று கவலை கொடுக்கும். திருமண வாழ்க்கைக்கு சிறப்பாக இருக்கும். உங்கள் வேலையில் வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும். சகோதரர்களுடன் சேர்ந்து புதிய தொழில் தொடங்க திட்டமிடலாம்.

துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று சவால் நிறைந்ததாக இருக்கும். மன வலிமையும், தைரியத்துடன் செயல்பட்டால் காரியத்தில் ஜெயம் உண்டாகும். பணியிடத்தில் உங்கள் எதிரிகள் உங்களுக்கு எதிரிராக செயல்பட வாய்ப்புள்ளது என்பதால், கவனம் தேவை. பேச்சிலும் நிதானம் தேவை. திருமண உறவு வலுவடையும். காதல் பெருகும். வேலை தொடர்பாக சிறப்பான நாளாக அமையும்.

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று சுமாரான பலன்கள் இருக்கும். வருமானம் அதிகரிக்கும் என்றாலும் செலவுகளும் அதிகமாகும். பலவீனமான உடல்நலம் காரணமாக, டென்ஷன் இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
உங்கள் வேலையில் புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். திருமணமானவர்களின் வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையால் பெரிய பலன்கள் ஏற்படும்,

தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று சாதாரண நாளாக இருக்கும். குடும்பப் பொறுப்புகளில் அதிக கவனம் செலுத்துவீர்கள். குடும்ப செலவுகளும் அதிகரிக்கும். மகிழ்ச்சியைப் பெறுவீர்கள். திருமணமானவர்களுக்கு நெருக்கம் அதிகரிக்கும் என்றாலும் ஏதோ ஒரு விஷயத்திற்காக தங்கள் துணையுடன் கோபப்படுவார்கள். உங்கள் காதல், வாழ்க்கைத் துணையுடன் பேசும் போது வார்த்தைகளில் கவனமாக இருக்கவும். வேலையில் திறமையாக செயல்படுவீர்கள். இன்று வியாபாரிகளுக்கு வெற்றிகரமான நாளாக இருக்கும்.

மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று கலவையான பலன்கள் கிடைக்கும். ஆரோக்கிய பிரச்னைகள் காரணமாக சோர்வாக காணப்படுவீர்கள். உடல் நலனிலும், உணவு விஷயத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளவும்.

வேலைக்கு இடையே சிறு ஓய்வு தேவைப்படும். காதலில் சிறப்பான அனுபவத்தைப் பெறுவீர்கள். திருமண வாழ்க்கை அதிர்ஷ்டம் மேலோங்கும். வேலை தொடர்பாக நல்ல முடிவுகள் பெறலாம்.

கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று அனுகூலமான நாளாக இருக்கும். உடல்நலம் சற்று பலவீனமாக இருக்க வாய்ப்புள்ளது. குடும்பச் சூழல் சிறப்பாக இருக்கும். காதலில் இனிமையான அனுபவம் ஏற்படும். திருமண வாழ்க்கையில் சில மன அழுத்தத்தைச் சந்திக்க வேண்டியது இருக்கும். வேலை சம்பந்தமாக இன்றைய நாள் உங்களுக்குச் சாதகமாக இருக்கும்.

Share
தொடர்புடையது
horoscope 2026 predictions 1763385900
ஜோதிடம்

2026 திரிகிரக யோகம்: இந்த 3 ராசிகளுக்கு அடித்தது அதிர்ஷ்டம் – குவியப்போகும் செல்வம்!

ஜோதிட சாஸ்திரத்தின்படி, 2026 ஆம் ஆண்டு நிகழவுள்ள ‘திரிகிரக யோகம்’ சில ராசிகளுக்குப் பொற்காலமாக அமையவுள்ளது....

tamilnaadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 01 டிசம்பர் 2025 : 12 ராசிகளுக்கு வருமானம் உயரும்

இன்று டிசம்பர் 01, கார்த்திகை மாதம் 15, சந்திர பகவான் மீன ராசி ராசியில் ரேவதி...

tamilnaadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 14 நவம்பர் 2025 : லட்சுமி தேவியின் அருளால் லாபம் சேரக்கூடிய ராசிகள்

இன்று 2025 நவம்பர் 14ம் தேதி வெள்ளிக்கிழமை, சந்திர பகவான் சிம்ம ராசியில் பூரம் நட்சத்திரத்தில்...

tamilnaadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 13 நவம்பர் 2025 – வேலையில் கவனம் தேவைப்படும் ராசிகள்

இன்று நவம்பர் 13ம் தேதி, ஐப்பசி மாதம் 27 சந்திர பகவான் சிம்ம ராசியில் சஞ்சாரம்...