24 662ddc891cb58
இலங்கைசெய்திகள்

அதிபர் தேர்தல் குறித்து மே தினத்தில் வெளியாகவுள்ள விசேட அறிவிப்பு

Share

அதிபர் தேர்தல் குறித்து மே தினத்தில் வெளியாகவுள்ள விசேட அறிவிப்பு

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ரணசிங்க பிரேமதாசவுக்கு பின்னர் சுமார் மூன்று தசாப்தங்களுக்கு பிறகு, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ஒருவர் அதிபராக இந்த வருட மே தினக் கூட்டத்தில் பங்கேற்கின்றார் என பாலித ரங்கே பண்டார (Palitha Range Bandara) தெரிவித்துள்ளார்.

சுமார் 50 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் ஐ.தே.க.வின் மே தின கூட்டத்தில் பங்கேற்பார்கள் எனவும் அதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின் மே தின கூட்டத்தில் பங்கேற்குமாறு பல அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இவ்வாறு பங்கேற்கும் கட்சிகளுடன் உத்தேச அதிபர் தேர்தலை மையப்படுத்தி பரந்துபட்ட அரசியல் கூட்டணி உருவாக்கப்படும் எனவும் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டம் புதன்கிழமை (மே 01) 2 மணிக்கு கொழும்பு – மருதானை பகுதியில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை உத்தேச அதிபர் தேர்தல் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் மே தின கூட்டத்தின்போது விசேட அறிவிப்பு ஒன்றை அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) வெளியிடவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

அன்றைய தினத்தில் அதிபர் ரணிலுக்கு ஆதரவளிக்கும் அரசியல் கட்சிகள் மே தின மேடையில் ஏறவுள்ளதாகவும் அக்கட்சி மேலும் குறிப்பிட்டுள்ளது.

வருட இறுதிக்குள் உத்தேசிக்கப்பட்டுள்ள அதிபர் தேர்தலில் அதிபர் ரணில் விக்ரமசிங்க போட்டியிடவுள்ளமையை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க (Sagala Ratnayaka) உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும் அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கும் பங்காளி கட்சிகளின் பிரதிநிதிகளை கடந்த வாரத்தில் சந்தித்திருந்த அதிபர் உத்தேச தேர்தல் மற்றும் அரசியல் கூட்டணி குறித்து விரிவாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இந்த சந்திப்பில் பசில் ராஜபக்ச (Basil Rajapaksa), பிரதமர் தினேஸ் குணவர்தன (Dinesh Gunawardena) மற்றும் டிரான் அலஸ் (Tiran Alles) உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் பங்கேற்றிருந்தனர்.

ரணில் விக்ரமசிங்கவை பொது வேட்பாளராக முன்னிறுத்தும் வகையில் இதன்போது முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடுகளும் எட்டப்பட்டுள்ளன.

இதனை மையப்படுத்தியே ஐக்கிய தேசிய கட்சியின் மே தின கூட்டத்தில் பங்கேற்க ஏனைய கட்சிகளுக்கு முதல் கட்டமாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...