24 662d2217e6c73
இலங்கைசெய்திகள்

உலகில் இலங்கையர்களை போன்று நல்லவர்கள் இல்லை! கொத்து ரொட்டி சர்ச்சையில் சிக்கிய சுற்றுலா பயணி

Share

உலகில் இலங்கையர்களை போன்று நல்லவர்கள் இல்லை! கொத்து ரொட்டி சர்ச்சையில் சிக்கிய சுற்றுலா பயணி

உலகில் இலங்கையர்கள் போன்று நல்லவர்கள் இல்லையென்று அண்மையில் கொத்துரொட்டி சர்ச்சையில் சிக்கிய சுற்றுலா பயணி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் இருந்து இலங்கை வந்த Emeka Iwueze என்ற சுற்றுலா பயணியே நெகிழ்ச்சியான தகவலை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

அண்மையில் கொழும்பு புதுக்கடையில் கொத்து ரொட்டி பெற்றுக் கொள்ள சென்றுள்ளார். 1900 ரூபாவுக்கு கொத்து ரொட்டி விற்பனை செய்யப்படுவதாக கூறி அவருடன் சர்சசையை ஏற்படுத்திய ஹோட்டல் உரிமையாளர் அண்மையில் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து Emeka Iwueze காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் இரண்டு நாட்கள் மட்டும் தங்கியிருந்த போதிலும், இந்த நாட்டு மக்களின் அன்பில் நெகிழ்ச்சி அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் ஒரு மாதம் தங்கியிருந்தேன். என்னால் அந்த பயணத்தை மகிழ்ச்சியுடன் அனுபவிக்க முடியவில்லை. அங்கு அதிகம் நெருக்கடியான சந்தர்ப்பங்களையே என்னால் உணர முடிந்தது.

இலங்கையில் 2 நாட்களே தங்க சந்தர்ப்பம் கிடைத்தது. எனினும் இலங்கையர்கள் போன்று நட்புறவனாவர்களை ஏனைய நாடுகளில் பார்க்கவில்லை.

இந்தியாவில் HI என ஒருவரிடம் கூறினால் முதல் என்னிடம் நீங்கள் எந்த நாட்டவர் என்றே கேட்பார்கள். அதன் பின்னர் நான் நாட்டை கூறிவிட்டால் என் பின்னால் தொடர்ந்து வந்து தொல்லை செய்வார்கள். பல சந்தர்ப்பங்களில் பலர் இவ்வாறான நடைமுறையில் பாதிக்கப்பட்டேன்.

ஆனால் இலங்கையர்கள் அவ்வாறு இல்லை நான் HI என்று கூறினால் எப்படி சுகம்? என மட்டுமே கேட்டுவிட்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்து சென்றுவிடுவார்கள்.

கொத்து ரொட்டி பிரச்சினை மட்டும் எனக்கு எதிராக நடந்த சிறிய சம்பவமாகும். அதனை தவிர இலங்கையில் இரண்டு நாட்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன்.

மிகவும் அழகான நாடு. அன்பான மனிதர்கள் நிம்மதியாக சுற்றுலா பயணம் மேற்கொள்ள முடியும். மீண்டும் இலங்கை வருவேன். நிச்சியமாக பல முறை நான் இலங்கை வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. இதுவே எனது முதல் பயணம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொத்துரொட்டி சம்பவத்தில் உரிமையாளர் கைது செய்யப்பட்ட பின்னர் குறித்த சுற்றுலா பயணி பதிவொன்றை பதிவிட்டிருந்தார், அதில் “இலங்கையர்கள் அனைவரிடமிருந்தும் நான் பெற்ற குறுந்தகவல்களுக்கு நான் உண்மையிலேயே நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

இலங்கையில் எனது நேரத்தை நான் எவ்வளவு நேசித்தேன் என்பதை வெளிப்படுத்த விரும்புகிறேன். அந்த நபர் சம்பந்தப்பட்ட துரதிர்ஷ்டவசமான சம்பவம் இருந்தபோதிலும், அது எனது ஒட்டுமொத்த அனுபவத்தை கெடுக்கவில்லை. உடனே அவரை மன்னித்துவிட்டேன்.

வீடியோவிற்கு கிடைத்த எதிர்வினை என்னை ஆச்சரியப்படுத்தியது, மேலும் அவர் தனது செயலுக்காக வருத்துவார் என நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
images 23
செய்திகள்இலங்கை

கொட்டாஞ்சேனைக் கொலைச் சம்பவம்: ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் துப்பாக்கிதாரி கைது – 72 மணி நேர தடுப்புக் காவலில் விசாரணை!

கொட்டாஞ்சேனைப் பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி நபரொருவரைக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி, ‘ஐஸ்’...

image 17
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரக் கட்டணங்கள் அதிரடி உயர்வு: வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!

வெளிநாட்டவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரம் (Driving License) வழங்குவதற்கான கட்டணங்களைத் திருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. போக்குவரத்து,...

MediaFile 14
செய்திகள்இலங்கை

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பம்

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.00 –...

20250719 124156
செய்திகள்இலங்கை

இந்திய முதலீட்டாளர்களுக்கு இலங்கை அழைப்பு: சுற்றுலா மற்றும் திரைப்படத் திட்டங்களில் ஒத்துழைக்க விஜித ஹேரத் வலியுறுத்தல்!

நாட்டில் புதிய சுற்றுலா முயற்சிகள் மற்றும் திரைப்படத் திட்டங்களை ஆராய்வதற்காக இந்திய முதலீட்டாளர்கள் மற்றும் திரைப்படத்...