24 662a047b5b5e4
இலங்கைசெய்திகள்

மின்சார சபை சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு

Share

மின்சார சபை சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவினால்(Kanchana Wijesekera) சற்று முன்னர் நாடாளுமன்றத்தில் உத்தேச மின்சார சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற அமர்வின் போது அமைச்சர் இதனை சமர்ப்பித்துள்ளார்.

இந்த முன்மொழிவு விரைவில் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

“மின்சாரத் தொழிலுக்காக சீர்த்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்காக ஏற்பாடு செய்வதற்கும்,தேசிய மின்சார மதியுரைப் பேரவையைத் தாபிப்பதற்காக ஏற்பாடு செய்வதற்கும், இச்சட்டத்தின் நியதிகளின் படி 2002 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க, இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்ட இலங்கைப் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சாரத் தொழிலுக்கான ஒழுங்குப்படுத்துநராகவிருப்பதற்கு ஏற்பாடு செய்வதற்குமான தீர்மானங்கள் சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க, கம்பனிகள் சட்டத்தின் கீழான எந்தக் கூட்டிணைக்கப்பட்ட உருவகங்களிலும் மின்பிறப்பாக்கம், மின்கடத்துகை, மின்விநியோகிப்பு, மின்வியாபாரம், மின்வழங்குகை மற்றும் மின்பெறுகை சம்பந்தமான அனைத்து செயற்பாடுகளும் உரித்தாக்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

அத்தோடு, அந்தக் கூட்டிணைக்கப்பட்ட உருவகங்களின் கூட்டிணைப்புக்கு ஏற்புடையற்பாலானவான சட்டவாக்க வழிமுறைகளை ஏற்பாடு செய்வதற்கும்,தொடர்புப்பட்ட செயற்பாடுகளுக்கும் ஏற்புடையற்பாலனவாக இருக்க வேண்டிய செயன்முறைகளைக் குறித்துரைப்பதற்கும், 1969 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க, இலங்கை மின்சாரச் சபைச் சட்டத்தையும், 2009 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க,இலங்கை மின்சார சட்டத்தையும் நீக்குவதற்கும்,அத்துடன் அவற்றோடு தொடர்புப்பட்ட அல்லது அவற்றின் இடைநேர்விளைவான எல்லாக் கருமங்களுக்கும் ஏற்பாடு செய்வது சட்டமூலத்தின் நோக்கமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...

images
செய்திகள்இலங்கை

மீட்புப் பணிகள் நடக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட வேண்டாம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாகப் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதிகளில்...

24 6717c3776cee3
செய்திகள்இலங்கை

சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில்...

download
செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்தில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தரைவழியாக அணுக முடியாத பகுதிகளுக்கு உதவி!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக தரைவழியாக அணுக முடியாத பகுதிகளில் சிக்கித் தவிக்கும்...