24 6596b6f2bd8c6
சினிமாபொழுதுபோக்கு

மீண்டும் அந்த நடிகையுடன் டேட்டிங்-ஆ? சர்ச்சையில் சிக்கிய நாக சைதன்யா

Share

மீண்டும் அந்த நடிகையுடன் டேட்டிங்-ஆ? சர்ச்சையில் சிக்கிய நாக சைதன்யா

நடிகை சமந்தாவின் முன்னாள் கணவரும், நடிகருமான நாக சைதன்யாவிற்கு இரண்டாம் திருமணம் என தொடர்ந்து பல தகவல்கள் வெளியாகிறது. ஆனால், அதுகுறித்து அதிகாரப்பூர்வமாக யாரும் அறிவிக்கவில்லை.

இந்த தகவல் ஒரு பக்கம் பரவி வந்த நிலையில், பிரபல நடிகை சோபிதாவுடன் நாக சைதன்யா டேட்டிங் செய்து வருகிறார் என கிசுகிசுக்கப்பட்டது. இது வெறும் கிசுகிசு தான் உண்மையில்லை என கூறப்பட்ட நிலையில், இருவரும் ஒன்றாக இருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

இதன்பின் இருவரும் டேட்டிங் செய்து வருகிறார்கள் என உறுதியகாவே கூறப்பட்டது. பின் இந்த விஷயம் அப்படியே சைலன்ட் ஆன நிலையில், தற்போது மீண்டும் இவர்கள் இருவரும் டேட்டிங் செய்து வருகிறார்கள் என நெட்டிசன்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இதற்கு காரணம் இவர்களுடைய புகைப்படங்கள் தான். நாக சைதன்யா தனது இன்ஸ்டா பக்கத்தில் சுற்றுலா சென்றுள்ள புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு நடிகை சோபிதா லைக் செய்திருந்தார்.

இந்த நிலையில், நாக சைதன்யா பதிவு செய்துள்ளது போலவே, நடிகை சோபிதாவும் சுற்றுலா சென்றுள்ள புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இருவரும் பதிவு செய்துள்ள புகைப்படங்களின் பின்னணியில் உள்ள இடம் ஒரே மாதிரியாக இருக்கிறதே, அதுமட்டுமின்றி இருவரும் டேட்டிங் சென்றுள்ளார்களா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

ஆனால், இருவரும் ஒரே இடத்தில் தான் இந்த புகைப்படங்களை எடுத்தார்களா என எந்த ஒரு உறுதியான தகவலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
jana nayakan300126
பொழுதுபோக்குசினிமா

ஜனநாயகன் பட விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் சென்சார் வாரியம் கேவியட் மனு தாக்கல்!

நடிகர் விஜய்யின் இறுதித் திரைப்படமாகக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தணிக்கை (Censor) விவகாரம் தற்போது உச்ச...

26 697ca16239330
பொழுதுபோக்குசினிமா

பூமிக்கு வரும் விண்கல்? ராஜமௌலியின் வாரணாசி படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிப்பு!

பிரம்மாண்டத்தின் உச்சமாகத் திகழும் இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி, சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிப்பில் உருவாக்கி...

2004158 atlee
பொழுதுபோக்குசினிமா

அட்லீ – அல்லு அர்ஜுன் இணையும் மெகா ப்ராஜெக்ட்: மீண்டும் இணையும் ‘லக்கி சார்ம்’ தீபிகா படுகோன்!

தமிழ் மற்றும் இந்தித் திரையுலகில் வெற்றிப் படங்களை வழங்கிய இயக்குநர் அட்லீ, தற்போது தெலுங்கு சூப்பர்ஸ்டார்...

Gf0V72bkAArSBx
பொழுதுபோக்குசினிமா

தனுஷின் தேரே இஷ்க் மெய்ன்: 2,200 பக்க PhD ஆய்வறிக்கை வசனத்தால் சமூக வலைத்தளங்களில் கிளம்பிய ‘மீம்’ திருவிழா!

இயக்குநர் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் தனுஷ் மற்றும் க்ரித்தி சனோன் நடிப்பில் வெளியான ‘தேரே...