உலகம்
இஸ்ரேலின் இலக்கில் தகர்க்கப்பட்ட அமெரிக்க நிறுவனம்: சீற்றத்தில் பைடன்
இஸ்ரேலின் இலக்கில் தகர்க்கப்பட்ட அமெரிக்க நிறுவனம்: சீற்றத்தில் பைடன்
காசாவில்(Gaza) உள்ள அமெரிக்க மனிதாபிமான தொண்டு நிறுவனமான ‘வோர்ல்டு சென்ட்ரல் கிச்சனில்’ மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலை வெள்ளைமாளிகை கடுமையாக கண்டித்துள்ளது.
அமெரிக்காவின்(USA) மனிதநேய உதவிப் பணியாளர்கள் கொல்லப்பட்ட விடயமானது ஈரானுடன்(Iran) ஏற்பட்ட மோதல் காரணமாக இஸ்ரேல் பெரிதாக கண்டுக்கொள்ளவில்லை என அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது.
இது தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்(Joe Biden) வெளியிட்டுள்ள அறிக்கையில்,
”இப்படி நடப்பது முதல்முறை அல்ல. உதவிப் பணியாளர்கள் மற்றும் பாலஸ்தீன குடிமக்களைப் பாதுகாக்க இஸ்ரேல் போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை” என குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்நிலையில் இஸ்ரேல் பிரதமருடன் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலில், காசாவுக்கு பெருமளவு மனிதாபிமான உதவிகள் கிடைக்க வேண்டும்.
வடக்கு காசாவில் உணவின்றிப் பட்டினியால் இறக்கும் குழந்தைகள் வசிக்கும் பகுதியில் இருந்து ஒரு மணிநேரத்திற்கும் குறைவான தூரத்தில் இஸ்ரேல் அதிகமான எல்லைக் கடப்புகளைத் திறக்க வேண்டும்.
அஷ்டோதில் உள்ள கொள்கலன் துறைமுகத்தையும் திறக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.
வெள்ளை மாளிகையின் அழுத்தத்தை எதிர்கொள்ளும் அதே வேளையில் நெதன்யாகு, மற்றொருபுறம் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் தன்னை ஆதரித்த தனது கூட்டணியை அதிகாரத்தில் வைத்திருக்கும் தீவிர தேசியவாதிகளின் அழுத்தத்திற்கும் ஆளாகியுள்ளதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
காசாவில் மனிதாபிமான உதவிகள் கிடைப்பதை மட்டும் அவர்கள் எதிர்க்கவில்லை. காசா வில் இந்தப் போர் யூதர்களை மீண்டும் குடியமர்த்துவதற்கான விலைமதிப்பற்ற வாய்ப்பை இஸ்ரேலுக்கு வழங்கியிருப்பதாக அவர்கள் திடமாக நம்புகிறார்கள் என கவலை வெளியிட்டுள்ளனர்.