சினிமாசெய்திகள்

தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட முன்னணி தயாரிப்பாளர்.. அதிர்ச்சியில் திரையுலகம்!

Share
24 661cb617026e4
Share

தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட முன்னணி தயாரிப்பாளர்.. அதிர்ச்சியில் திரையுலகம்!

கன்னட திரையுலகில் தயாரிப்பாளரான சௌந்தர்ய ஜெகதீஸ் என்பவரின் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் கன்னட திரையுலகில் முன்னணி தயாரிப்பாளர் ஆவாராம். தொழிலதிபரான இவர் கன்னடத்தில் வெளிவந்த பப்பு, மஸ்த் மஜா மதி, ராம்லீலா, சிநேகிதிரு ஆகிய படங்களை தயாரித்துள்ளார்.

பெங்களூருவில் உள்ள மகாfலட்சுமி லே அவுட்டில் வசித்து வந்த தயாரிப்பாளர் சௌந்தர்ய ஜெகதீஸ் நேற்று அதிகாலை 4 மணி அளவில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இந்த விஷயம் அவருடைய குடும்பத்தினருக்கு காலை 9.30 மணி அளவில் தான் தெரியவந்ததாக கூறப்படுகிறது.

பின் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால், அவர் இறந்து சில மணி நேரங்கள் ஆகிவிட்டது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்களாம். இவருடைய தற்கொலை குறித்து காவல் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்களாம்.

சமீபகாலமாக சௌந்தர்ய ஜெகதீஸ் மன உளைச்சலில் இருந்ததாகவும், அதற்காக அவர் மருந்துகளை எடுத்து வந்ததாக அவரின் குடும்பத்தினர் கூறியுள்ளனர். தயாரிப்பாளர் சௌந்தர்ய ஜெகதீஸின் தற்கொலை விவகாரம் பெரும் அதிர்ச்சியை திரையுலகினர் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
31
சினிமா

சிம்பு-தனுஷுடன் ரொமான்ஸ் செய்ய நான் ரெடி.. பிரபல தொகுப்பாளினி ஒபன் டாக்

ரஜினி-கமல், அஜித்-விஜய் அடுத்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் சிம்பு-தனுஷ். ரசிகர்கள் போட்டிபோட்டுக் கொண்டாலும் அவர்கள் நட்பாக தான்...

35
சினிமா

டிடி-யை உடை மாற்ற சொன்ன நடிகை.. நயன்தாரா தானா? முதல் முறையாக சொன்ன டிடி

தமிழில் பிரபல தொகுப்பாளராகி இருப்பவர் டிடி. அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது என தெரியவேண்டியது...

32
சினிமா

12 பிரபலங்களுடன் டேட்டிங்.. 50 வயதாகியும் திருமணம் செய்துக்கொள்ளாமல் இருக்கும் நடிகை

சினிமாவில் காதல் சர்ச்சையில் சிக்காமல் தப்பித்தது சிலராக மட்டுமே இருக்க முடியும். அதுவும் பாலிவுட் திரையுலகம்...

33
சினிமா

அஜித் ஒரு குட்டி எம்ஜிஆர்.. AK குறித்து மனம் திறந்து பேசிய பிரபலம்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் அஜித். சமீபத்தில் குட் பேட் அக்லி எனும்...