24 6618a5cb20e90
சினிமாபொழுதுபோக்கு

மாரடைப்பால் மரணமடைந்த தமிழ் நடிகர்! அதிர்ச்சியில் ரசிகர்கள்

Share

மாரடைப்பால் மரணமடைந்த தமிழ் நடிகர்! அதிர்ச்சியில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களின் மரணங்கள் தொடர்ந்து நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. இந்த நிலையில் தற்போது தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் அருள்மணி.

இவர் நடிகரும், அதிமுக கட்சியை சேர்ந்த பேச்சாளரும் ஆவார். வேல், அழகி, தென்றல் போன்ற படங்களில் நடித்துள்ள அருள்மணி, அரசியல் மீதுள்ள ஈர்ப்பால் அதிமுக கட்சியில் இணைந்து செயல்பட துவங்கினார்.

இந்நிலையில் தேர்தல் பிரச்சார களத்தில் ஈடுபட்டு இருந்த அருள்மணிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அருள்மணி மரணமடைந்தவிட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. இவருடைய வயது 65.

நடிகரும், நட்சத்திர பேச்சாளருமான அருள்மணியின் இந்த மரணம் ரசிகர்கள், அதிமுக தொண்டர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பலரும் தங்களின் இரங்கலை சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்து வருகிறார்கள்.

Share
தொடர்புடையது
world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 137
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு: 6 பேர் கைது – சைபர் க்ரைம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக்...

world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...