ஜோதிடம்

​இன்றைய ராசி பலன் 07.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

Share
Rasi Palan new cmp 1 scaled
Share

​இன்றைய ராசி பலன் 07.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசிபலன் ஏப்ரல் 07, 2024, சோபகிருது வருடம் பங்குனி 25, ஞாயிற்று கிழமை, சந்திரன் மீன ராசியில் சஞ்சரிக்கிறார். கடக ராசியில் உள்ள சேர்ந்த பூசம், ஆயில்யம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் எண்ணங்கள் நிறைவேறுவதில் முன்னேற்றம் ஏற்படும். உடல் நலம் தொடர்பான பிரச்சனைகளில் அலட்சியப்படுத்த வேண்டாம். சில ஏமாற்றமான தகவல்கள் வர வாய்ப்புள்ளது. திடீர் பயணங்கள் செல்ல நேரிடலாம். நீண்ட நாட்களாக கவலைப்பட்டுக் கொண்டிருந்த சில விஷயங்களில் இருந்து மீள்வீர்கள். இன்று உணர்ச்சி வசப்பட்டு எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டாம்.

ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய நாளாக அமையும். நண்பர்களுடன் இருந்த சில பிரச்சனைகள் தீர்ந்து நெருக்கம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு கொடுக்கப்படக்கூடிய புதிய பொறுப்புகளை சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். புதிய வண்டி வாகனம் வாங்கும் கனவு நிறைவேறும். குடும்ப உறுப்பினர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியும்.

மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று நீங்கள் விரும்பிய நற்பலன்கள் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். உங்களின் வரவு மற்றும் செலவு சார்ந்த விஷயத்தில் கவனமாக செயல்படவும். பரிவர்த்தனை விஷயத்தில் நிதானமும், கவனமும் தேவை. குடும்ப உறுப்பினர்களுக்கு கொடுத்த வாக்குறுதியையும், அவர்களின் விருப்பத்தையும் நிறைவேற்ற கவனம் செலுத்துவீர்கள்.

கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு முன்னேற்றம் தரக்கூடிய நாளாக இருக்கும்.உங்கள் பணிகளில் இருக்கக்கூடிய தடைகள் எதிர்கொண்டு, சிறப்பாக முன்னேறுவீர்கள். இன்று உங்களின் வருமானம் அதிகரித்து மன மகிழ்ச்சி அடைவீர்கள். உங்களின் எந்த ஒரு வேலையிலும் பிறரின் அறிவுரை நற்பலனை தரக்கூடியதாக இருக்கும்.

சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்றுஉங்களுக்கு மிகவும்பலனளிக்க கூடிய நாளாக இருக்கும். குடும்ப பொறுப்புகளை நிறைவேற்றுவதில் கவனமாக இருக்கவும். எந்த ஒரு சர்ச்சைகளையும் தவிர்க்கவும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் ஆவணங்களை சரி பார்க்கவும். புதிய வேலைகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். பெற்றோருடனான மன வருத்தம் தீரும்.

கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு சிக்கல்கள் நிறைந்த நாளாக இருக்கும். சகோதரத்துவத்தை அதிகரிப்பதில் கவனம் தேவை. திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன் அமைய வாய்ப்புள்ளது. இன்று வேலை அல்லது குடும்ப விஷயமாக பயணம் செல்ல நேரிடும். உங்களின் சகோதரத்துவம் வளரும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான சாதக சூழல் நிலவும். புதிய சொத்து வாங்கும் ஆசை நிறைவேறும்.

துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே இருந்த பழைய மனக்கசப்புகள் தீரும். குடும்பத்தில் பரஸ்பர உறவுகள் வலுவாக இருக்கும். மன குழப்பமான சூழ்நிலையில் குடும்ப பெரியவர்களின் ஆலோசனை ஆறுதலை தரும். பணிபுரிபவர்களுக்கு நல்ல வருமான வாய்ப்பு, முதலீட்டுக்கான சாதக சூழலும் நிலவும். உங்களின் தனிப்பட்ட விஷயத்தில் வெளியாக்களை தவிர்க்க வேண்டும்.

விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று நற்பலன் தரக்கூடிய நாளாக அமையும்.. சில முக்கிய வேலைகளை முடித்து மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள், விருந்து ஏற்பாடு செய்வீர்கள் .எந்த ஒரு வேலையையும் தள்ளி போட வேண்டாம். முதலீடு சார்ந்த விஷயத்தில் துறை வல்லுனர்களின் ஆலோசனை பெறுவதும் நல்லது.

தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று வெளியூர், வெளிநாட்டிலிருந்து உங்களுக்கு சில நல்ல செய்திகள் தேடி வரும். பண பரிவர்த்தனை தொடர்பான விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும். உங்களின் அதீத ஆசையை கட்டுப்படுத்தவும். எதிரிகள் விஷயத்தில் கவனமாக இருக்கவும். இன்று உங்கள் பேச்சு செயலில் கண்ணியத்தை கடைபிடிக்கவும். உங்கள் வேலைகளை எளிதாக முடிக்க முடியும்.

மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் சிக்கல்கள் தீரக்கூடிய நாளாக அமையும். உற்சவக்தர்களுக்கு பதவி உயர்வும், புதிய வேலை தேடுபவர்களுக்கு நீங்கள் விரும்பிய வகையில் வேலையும் அமைய வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் திட்டமிட்ட நல்ல லாபம் கிடைக்கும். பிள்ளைகளின் வேலை, தொழில் சார்ந்த விஷயத்தில் உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும். நீங்கள் நிர்ணயித்த இலக்கை அடைய முடியும்.

கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு பதவி, கௌரவம் உயரும். அரசு பணியில் உள்ளவர்கள் பணம் தொடர்பான விஷயத்தில் கவனம் தேவை. பணியிடத்தில் உங்களின் பொறுப்புகளை எளிதாக முடித்து மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். இன்று உங்களின் உணவு பழக்க வழக்கத்தில் கவனமாக இருக்கவும். வயது தொடர்பான பிரச்சனைகள் தொந்தரவு தர நேரிடும். இன்று உங்கள் மனம் அலைக்கழிக்கப்படும்.

மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று சில புதிய தொடர்புகள் கிடைத்து மன மகிழ்ச்சி அடைவீர்கள். அதிர்ஷ்டம் உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். பணியிடத்தில் சிந்தனையுடன் செயல்பட்டு. முன்னேற்றம் அடைவீர்கள். இன்று நீங்கள் பழைய தவறுகளில் இருந்து கற்ற பாடத்தை சிறப்பாக பயன்படுத்திக் கொள்வீர்கள்.உங்கள் வேலையில் விரும்பிய நற்பலனை பெறுவீர்கள்.

Share
Related Articles
tamilnaadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 04 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 4.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 21, ஞாயிற்று கிழமை, சந்திரன் கடகம்...

tamilnaadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 03 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 3.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 20, சனிக் கிழமை, சந்திரன் தனுசு...

tamilnaadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 02 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 2.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 19, வியாழக் கிழமை, சந்திரன் மிதுனம்...

tamilnaadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 01 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 01.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 18, புதன் கிழமை, சந்திரன் ரிஷப...