24 661144ee39534
இலங்கைசெய்திகள்

IMFஇன் மூன்றாவது தவணை நிதி தொடர்பில் தகவல்

Share

IMFஇன் மூன்றாவது தவணை நிதி தொடர்பில் தகவல்

சர்வதேச நாணய நிதியத்தின் (International Monetary Fund) நீடிக்கப்பட்ட நிதி வசதியின் மூன்றாவது தவணை ஜூன் மாதத்திற்குள் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க (Shehan Semasinghe) தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், ஜூன் மாதத்திற்குள் மூன்றாவது தவணையை எதிர்பார்க்கிறோம். அதுதான் நிலையான நடைமுறை.

கடன் மறுசீரமைப்பிற்கு பின்னர் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளுக்கு இடையே ஊழியர்கள் நிலை ஒப்பந்தம் உள்ளது.

அதை தொடர்ந்து, அந்த ஒப்பந்தத்தை முன்வைப்பதற்கான திகதியை சர்வதேச நாணய நிதியம் தீர்மானிக்கும். இதற்கு பிறகுதான் மூன்றாவது தவணையாக 337 மில்லியன் டொலர்களைப் பெறமுடியும். ஆனால் அதற்கு முன் நாம் முடிக்க வேண்டிய பணி ஒன்று உள்ளது.

அதாவது கடனை மறுசீரமைப்பதற்கான ஒருமித்த கருத்தை எமது கடனாளிகளிடமிருந்து பெற்றுக் கொள்ள வேண்டும். எனினும் அனைத்து இருதரப்பு கடன் வழங்குநர்களின் பூர்வாங்க ஒப்புதலைப் பெற்றுள்ளோம்.

வணிகக் கடன் வழங்குநர்களுடன் ஒப்பந்தங்கள் எட்டப்படுவதற்கான வலுவான எதிர்பார்ப்புகள் உள்ளதாக நேற்று சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது. உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு பெரும்பாலும் நிறைவடைந்துள்ளது.

உள்நாட்டு அரச நிறுவன கடன் மறுசீரமைப்பு விரைவில் நிறைவடையும் என மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் நம்பிக்கை அளித்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
image 1200x800 14 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட கொலை வழக்கு: சந்தேகநபர்களுக்குத் தடுப்புக்காவல்! – நூற்றுக்கணக்கான சட்டத்தரணிகள் நீதிமன்றில் திரண்டனர்!

சட்டத்தரணி புத்திக மல்லவஆராச்சி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட...

images 1 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூடு: இரு பொலிஸ் அதிகாரிகள் கைது! – தலைமையகம் அதிரடி நடவடிக்கை!

கொழும்பு, ஜிந்துபிட்டி பகுதியில் கடந்த சனிக்கிழமை (14) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது, தமது...

image 1200x800 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீகிரியாவில் சோகம்: காட்டு யானை தாக்கியதில் ஹங்கேரி நாட்டுச் சுற்றுலாப் பயணி பலி!

இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத் தலமான சீகிரியா மற்றும் பிதுரங்கலை மலைக்கு இடைப்பட்ட காட்டுப்பகுதியில், காட்டு...

image 1200x800 35
செய்திகள்இலங்கை

ஓய்வுக்காலத்தின் சொர்க்கபுரி இலங்கை! – 2026-இல் உலகின் மிக மலிவான நாடாக முதலிடம்; ‘Travel + Leisure’ புகழாரம்!

உலகின் முன்னணி பயண மற்றும் வாழ்க்கைமுறை சஞ்சிகையான ‘Travel + Leisure’, 2026-ஆம் ஆண்டில் ஓய்வுபெற்ற...