ice
செய்திகள்உலகம்

இமய மலையில் தண்ணீர் பஞ்சமா? – ஐஸ் கோபுர திட்டம் முன்னெடுப்பு!

Share

இமயமலையில் நிலவும் தண்ணீர் பஞ்சத்தை சரி செய்ய ஒரு செயற்கை பனிமலையை அபர்தீன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் வடிவமைத்து  வருகின்றனர்.

அந்தப் பனிமலை ‘ஐஸ் ஸ்தூபம் (ஐஸ் கோபுரம்) என்று அழைக்கப்படுகின்றது.

இத் திட்டம் 2013ஆம் ஆண்டு ‘சோனம் வாங்சுக்’ என்கிற பொறியாளரால் கண்டுபிடிக்கப்பட்டது.

ஆனால் இந்த யோசனை தற்பொழுதுதான் ஆரம்பநிலையில் இருக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

அபர்தீன் க்ரையோஸ்ஃபியர் மற்றும் பருவநிலை ஆராய்ச்சிக் குழுவினர் இப்பகுதியில், இந்த யோசனையை மேம்படுத்தவும், அதை பரவலாக பயன்படுத்தவும் தேவையான பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

ஐஸ் கோபுர திட்டத்தின் படி, இப்பகுதியில் இருக்கும் பெரும்பாலான கிராமங்கள், ஏப்ரல், மே மாதங்களில் கடுமையான தண்ணீர் பஞ்சத்தை எதிர்கொள்கின்றன.

ஆகவே இதற்குத் தீர்வாக இப்பனிமலைத் திட்டங்கள் அமைகின்றன.

கடந்த ஏப்ரல் மாதம் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில், உலகில் உள்ள பனிமலைகள் அதிவேகமாக உருகி வருகின்றன எனவும், கடந்த 20 ஆண்டுகளில், ஆண்டுக்கு 270 பில்லியன் டன் பனிமலைகள் உருகிவிட்டன எனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 161
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்துகளால் 713 பேர் பலி: வாகன ஓட்டுநர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

தற்போது நிலவி வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும், கவனக்குறைவாகச் செயல்படுவதையும் தவிர்க்குமாறு இலங்கை...

world 160
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நிகழ்ந்த விபத்துக்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்: பொலிஸாரின் அதிரடி சோதனைகள்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் பொலிஸ் சோதனைகளில் பலர்...

world 159
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பட்டாசு வெடிக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது எதிர்பாராத விதமாக இடம்பெறும் பட்டாசு விபத்துகளைத் தடுப்பது குறித்து சுகாதார...

world 158
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கல்கிசையில் மோதல்: இலங்கை பெண்ணைத் தாக்கிய உக்ரைன் பெண் விளக்கமறியலில்!

கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக கடந்த 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம்...