சினிமா
நடிகை மீனாவின் பிரம்மாண்ட வீடு.. அவரது மொத்த சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா
நடிகை மீனாவின் பிரம்மாண்ட வீடு.. அவரது மொத்த சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா
நடிகை மீனா 80களில் குழந்தை நட்சத்திரமாகவும் மற்றும் 90 களில் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் மீனா. அவரது கண்ணழகுக்கே எக்கச்சக்க ரசிகர்கள் இருக்கின்றனர்.
தற்போது 47 வயதாகும் மீனா படங்களில் குணச்சித்திர ரோல்கள் மற்றும் டிவி ரியாலிட்டி ஷோ நடுவர், விளம்பரங்கள் என பலவற்றில் நடித்து வருகிறார்.
மீனா 2009ல் வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு நைனிகா என்ற ஒரு மகளும் இருக்கிறார். 2022ல் மீனாவின் கணவர் உடல்நலக்குறைவால் மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது.
நடிகை மீனாவுக்கு சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் சொந்தமாக பிரம்மாண்ட வீடு இருக்கிறது. கேரள முறைப்படி அந்த வீட்டை கட்டி இருக்கின்றனர்.
நடிகை மீனா நடிகையாக இருந்தபோது சேர்த்த சொத்து, அவரது கணவர் பெரிய வேலையில் இருந்த நிலையில் அவர் சேர்த்து வைத்த சொத்து என மொத்தமாக 35 முதல் 40 கோடி ருபாய் அளவுக்கு தற்போது மீனாவுக்கு இருக்கிறது.