24 660a2f1e7d797
இலங்கைசெய்திகள்

நாட்டில் குழந்தைகளிடையே அதிகரிக்கும் குறைபாடு – வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை

Share

நாட்டில் குழந்தைகளிடையே அதிகரிக்கும் குறைபாடு – வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை

நாட்டில் பார்வை குறைபாட்டால் குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுவதாக வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் பெரும்பாலான குழந்தைகள் மூக்குக் கண்ணாடி அணிவதை வழக்கமாக வைத்துள்ளதோடு, தற்போது லென்ஸ் பயன்பாடும் அதிகரித்து வருகின்றது.

குழந்தைகளின் பார்வை குறைபாடு தொடர்பில் வைத்திய நிபுணர்கள் மேலும் விளக்கமளிக்கையில்,

அதிக நேரம் வீட்டுக்குள்ளேயே செலவிடுவதும், தொழில்நுட்பத்திற்கு அடிமையாகி இருப்பதும் இன்று அதிகமான குழந்தைகள் கிட்டப்பார்வை கொண்டவர்களாக இருக்க முக்கிய காரணமாக அமைந்திருப்பதாக வைத்திய நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஒருவரின் கண் பார்வை மிக நீளமாக இருக்கும்போது அல்லது கார்னியா மிகவும் வளைந்திருக்கும் போது கிட்டப்பார்வை ஏற்படலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான பார்வை குறைப்பாடுகள் ஏற்படும் பொழுது கண்ணாடியை வைத்தியர்கள் பரிந்துரைக்கின்றனர்.

எவ்வாறாயினும் ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்தவுடன் பார்வை கோளாறுகள் அனைத்து விடயங்களிலும் சவாலாக மாறும் என வைத்திய நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
IMG 7681
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொத்மலையில் மாபெரும் சிரமதானப் பணி: 20 கிராமங்களுக்கான போக்குவரத்துப் பாதையைச் சீரமைக்க 2,000 பேர் திரண்டனர்!

டித்வா (Ditwah) புயலினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட கொத்மலை, பனங்கம்மன பகுதி மற்றும் மகா பீல்ல கால்வாய்...

MediaFile 2 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அதிவேக வீதியில் அதிரடிச் சோதனை: கடவத்தை நுழைவாயிலில் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது!

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதி மற்றும் கடவத்தை வெளியேறும் நுழைவாயில் பகுதிகளில் இன்று (18)...

image b16dc0e689
செய்திகள்இலங்கை

மின்சார சபை மறுசீரமைப்பு: 2,200 ஊழியர்கள் ஜனாதிபதிக்கு அவசர கடிதம் – வாழ்க்கைத் தரம் கேள்விக்குறி என முறையீடு!

இலங்கை மின்சார சபையின் (CEB) மறுசீரமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, விருப்ப ஓய்வுக்காக (VRS) விண்ணப்பித்துள்ள...

arast 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

1 கோடி ரூபா மோசடி செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் கைது!

இணையத்தளம் வாயிலாகத் தளபாடங்கள் (Furniture) வழங்குவதாகக் கூறி, பொதுமக்களிடமிருந்து ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை...