24 6604fef0e5cdf
உலகம்செய்திகள்

ஆண்டின் மிகப்பெரிய போதைப்பொருள் விநியோகம் கொலம்பியாவில் முறியடிப்பு

Share

ஆண்டின் மிகப்பெரிய போதைப்பொருள் விநியோகம் கொலம்பியாவில் முறியடிப்பு

ஏறக்குறைய நான்கு டன் போதைப்பொருள் ஏற்றப்பட்டிருந்த கொலம்பிய வேகப் படகு ஒன்று பிடிக்கப்பட்டுள்ளமையானது இந்த ஆண்டின் மிகப்பெரிய போதைப்பொருள் விநியோகத்தை தடுத்துள்ளது.

குறித்த வேகப் படகை கொலம்பியாவின் இராணுவக் கப்பல்களும் விமானங்களும் துரத்திச் சென்று, கொலம்பியாவிற்கு அப்பால் கரீபியன் கடலில் வைத்து பிடித்துள்ளன.

இதன்போது, குறித்த படகில் இருந்து 113 மில்லியன் டொலருக்கும் அதிகமான மதிப்புள்ள போதைப்பொருளினை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கொலம்பிய கடற்படை வெளியிட்டுள்ள வான்வழி காணொளியில், சந்தேகத்திற்கிடமான படகின் பணியாளர்கள் தப்பிக்க முயல்வது மற்றும் பொதிகளை தண்ணீரில் வீசுவது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளன.

அத்துடன், பல மைல்கள் துரத்தலுக்குப் பிறகு, படகு இடைமறிக்கப்பட்டுள்ளதோடு வேகப் படகில் இருந்த கொலம்பியாவை சேர்ந்த மூவரும் ஹோண்டுரான் மற்றும் வெனிசுலாவைச் சேர்ந்த இருவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதோடு அவர்கள் வைத்திருந்த போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 30
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கிரிக்கெட் திருவிழா: 15 தனியார் ஜெட் விமானங்களில் இலங்கை வந்தடைந்த உலகளாவிய விஐபிக்கள்!

கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நேற்று முன்தினம் (15) நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தியா –...

image 1200x800 23
செய்திகள்உலகம்

ஜெனீவா பேச்சுவார்த்தைக்கு மத்தியில் போர் தீவிரம்! – ரஷ்ய துறைமுகம் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்; ஒடேசா இருளில் மூழ்கியது!

ரஷ்யா – உக்ரைன் போர் தொடங்கி நான்கு ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, அமெரிக்காவின் முன்னிலையில் ஜெனீவாவில் இன்று...

image 1200x800 24
செய்திகள்இலங்கை

ஊழலுக்கு எதிரான போரில் இலங்கையின் மகா பாய்ச்சல்! -அநுர அரசாங்கத்திற்கு மக்கள் பாராட்டு!

கடந்த 70 வருட கால அரசியல் வரலாற்றில் ஊழல் நிறைந்த நாடாகப் பார்க்கப்பட்ட இலங்கை, அநுர...