24 6604de346a159
இலங்கைசெய்திகள்

இலங்கையின் சனத்தொகையில் வீழ்ச்சி

Share

இலங்கையின் சனத்தொகையில் வீழ்ச்சி

இலங்கையின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுதந்திரத்திற்கு பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக இலங்கையில் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக இலங்கை பதிவாளர் திணைக்களத்தின் புள்ளி விபரத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் 30ம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப் பகுதியில் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இலங்கை சனத்தொகை குறித்த காலப் பகுதியில் 144,395 ஆல் குறைவடைந்துள்ளது.

குறித்த காலப் பகுதியில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார நெருக்கடி நிலைமைகளினால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த காரணிகளினால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

Share
தொடர்புடையது
world 201
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அமைதிப் பேரணிக்காக இலங்கை வரும் ‘அலோகா’: விமானத்தில் பயணிகளுடன் பயணிக்கச் சிறப்பு அனுமதி!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள சர்வதேச “அமைதிப்...

world 200
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வாகன இலக்கத் தகடுகளில் மாற்றமா? பொலிஸார் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை!

இலங்கையில் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தரநிலைகளுக்குப் புறம்பாக, தரமற்ற மற்றும் வர்ணமயமான வாகனப் பதிவு...

world 197
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைக்கு ஒரு பேரல் எண்ணெய் $286: உலகளாவிய எரிசக்தி நெருக்கடியில் சிக்கிய தீவு தேசம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எண்ணெய் நெருக்கடி, காகித வர்த்தகத்தைத் தாண்டி...

world 199
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு கால சுற்றிவளைப்பு: 400 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலப்பகுதியில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் உணவுகளின் தரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் நாடு...