நுவரெலியா பொது வைத்தியசாலையில் பணியாற்றும் சுகாதார பணியாளர்கள் இன்று(27) தமது உரிமைகளைக் கோரி அடையாள பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
இந்த பணி பகிஷ்கரிப்பு போராட்டம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டது ..
ஒன்றிணைந்த சுகாதார ஊழியர் சங்க ஏற்பாட்டில் நடந்த இந்த பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தில் 300 இற்கும் அதிகமான சுகாதார பணியாளர்கள் தமது கோரிக்கைகளை முன்வைத்தது போராட்டத்தில் ஈடுபட்டனர்
சுகாதார பணியாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படல் வேண்டும், மேலதிக சேவை நேரத்துக்குரிய கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் ,கொவிட் தொற்று காலத்தில் ஏனைய அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கப்படும் விசேட கொடுப்பனவு மற்றும் கொரோனா பாதுகாப்பு உடை உள்ளிட்ட சலுகைகள் தமக்கும் வழங்கப்பட வேண்டும் என மேலும் சில கோரிக்கைகளை இவர்கள் முன்வைத்ததுள்ளனர் .
Leave a comment