24 65fe1f3d57c4e
அரசியல்இலங்கைசெய்திகள்

சிறீதரன்-சுமந்திரனுக்கு இடையில் தீர்க்கப்படாத பிரச்சினை!

Share

சிறீதரன்-சுமந்திரனுக்கு இடையில் தீர்க்கப்படாத பிரச்சினை!

சுமந்திரனும் ஸ்ரீதரனும் பிரச்சினைகளை எவ்வளவுக்கெவ்வளவு பிற்போடுகிறார்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு அப்பிரச்சினை பூதாகரமாகிக் கொண்டே போகும். அல்லது போக வைப்பார்கள் என கம்பபாரதி ஜெயராஜ் தனது உரலார் கேள்வி,உலக்கையார் பதில் என்ற தொகுப்பில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அந்த தொகுப்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

உரலார் கேள்வி :- சுமந்திரனும் ஸ்ரீதரனும் தமக்குள் பேசி பிரச்சினைகளைத் தீர்ப்பார்கள் என்று நினைக்கிறீர்களா?

உலக்கையார் பதில் :- அது அவர்களுக்குத்தான் தெரியும்.ஆனால் ஒன்று! தீர்ப்பது என்று உண்மையிலேயே முடிவு செய்வார்களே ஆனால், எவ்வளவு விரைவில் அக்காரியத்தைச் செய்யமுடிமோ அவ்வளவு விரைவில் அதனைச் செய்து முடிக்க வேண்டும்.

பிரச்சினைகளை எவ்வளவுக்கெவ்வளவு பிற்போடுகிறார்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு அப்பிரச்சினை பூதாகரமாகிக் கொண்டே போகும். அல்லது போக வைப்பார்கள்.

இப்போது பிரச்சினை என்கிற மாட்டின் மூக்கணாங்கயிறு இவ்விருவர் கையிலும் இருக்கிறது.

இன்னும் சில நாட்கள் சென்றால் இவ்விருவரது மூக்கணாங்கயிறும் பிரச்சினைகளை வளர்ப்போரின் கைக்கு போய்விடும். அப்போது இவர்கள் நினைத்தாலும் ஒன்றும் செய்யமுடியாது.

சல்லடையார் சலிப்பு – கூட இருக்கும் கும்பிடு சாமிகள், இவர்களை தம் இஷ்டப்படி இயங்க விடுவார்களா?

Share
தொடர்புடையது
Featuredvdfv
இலங்கை

ஆபத்தான ஆயுதங்களுடன் இரத்மலானையில் பலர் கைது!

இரத்மலானை கொனா கோவில பகுதியில் 3 வாள்கள், 1 கோடரி, 3 கத்திகள் மற்றும் உள்நாட்டில்...

dead body 2
இலங்கை

தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்!

இன்றைய தினம், யாழ்ப்பாணம் – நாரந்தனை பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக...

bus bike accident
இலங்கை

சற்று முன்னர் இடம்பெற்ற கோர விபத்து – பலியான வங்கி ஊழியர்!

அனுராதபுரம் – பாதெனிய வீதியில் மோட்டார் சைக்கிளும் தனியார் பேருந்தும் மோதி ஏற்பட்ட கோர விபத்தில்,...

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள்
இலங்கை

உயர் அதிகாரிகளுக்கு திடீரென வழங்கப்பட்ட இடமாற்றங்கள்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றங்களை வழங்க பொலிஸ்...