24 65fd14ec2a37b
இலங்கைசெய்திகள்

தேர்தலில் ஜனாதிபதியை வெற்றிபெறச் செய்ய வேண்டும்

Share

தேர்தலில் ஜனாதிபதியை வெற்றிபெறச் செய்ய வேண்டும்

ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்ரமசிங்கவை நியமித்து தேர்தலில் வெற்றிபெறச் செய்து நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் என்பதை கூறுவதற்காகவே நான் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளேன் என முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று (21) நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், “உங்கள் நம்பிக்கையின் ஊடாக நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான அத்திபாரத்தை அமைப்பதே எமக்கு அவசியமாகும்.

தங்களது பிள்ளைகளின் கல்வியை உறுதிப்படுத்துவதே யாழ்ப்பாணத்தில் உள்ள பெரும்பாலான மக்களின் ஒரே நோக்கமாகும். மேலும், இந்த பிரதேசத்தின் விவசாயத் துறையை நாம் எவ்வாறு முன்னேற்றுவது? பெரும்பாலோனரின் உறவினர்கள் இங்கு வெளிநாடுகளில் உள்ளனர்.

சுமார் 40 முதல் 45 சதவீதமானனோரின் குடும்பங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் வருகின்றது. இதன் காரணமாக அந்த பணமானது புகைத்தல் அல்லது மதுபானம் போன்ற அவசியமற்ற செயற்பாடுகளுக்காக செலவிடப்படுகின்றது.

எனவே, அந்த பணத்தை எவ்வாறு சரியான முறையில் செலவு செய்வது என்பது பெற்றோருக்கு உள்ள பிரச்சனையாகும்.அத்துடன், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதும் ஒரு பிரச்சினையாக உள்ளது.

யாழ்ப்பாணத்தில் சேதமடைந்துள்ள சின்னங்களை சீரமைப்பது மற்றும் கோவில்களை புனர்நிர்மாணம் செய்தல் முதலான பிரச்சனைகளுக்கு எவ்வாறு பதில் தேடுவது என்பதே பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பாகும்.

நீங்கள் இவற்றை எமக்கு மறைக்க வேண்டிய தேவையில்லை. உண்மையான தீர்வு ஒன்றை வழங்க வேண்டும் என்பதற்காகவே நாம் உங்களுடன் வருகின்றோம்.

நாட்டில் தற்போது அர்ப்பணிப்புடன் செயல்படும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவின் அடிப்படையில் இந்த நாட்டை அபிவிருத்தி செய்வதே இதற்கு ஒரே தீர்வாகும்.

எதிர்காலத்தில் மாதத்திற்கு ஒரு முறை இங்கு வந்து, உங்களிடம் நம்பிக்கையைக் கட்டியெழுப்பி எதிர்காலத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் கட்சி சார்பற்ற வேட்பாளராக ரணில் விக்ரமசிங்கவை நிறுத்தி ஜனாதிபதியாக தேர்வு செய்வதற்காக நாம் இபபொழுதிருந்தே செயற்பட வேண்டுமென்பதை நான் இங்கு கூறுகின்றேன்”என்றும் கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 133
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வட்டுக்கோட்டையில் பயங்கரம்: இளைஞர் வெட்டிக்கொலை – இருவர் படுகாயம்!

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட தொல்புரம் பகுதியில் நேற்றிரவு (ஏப்ரல் 12, 2026) இடம்பெற்ற மோதலில்...

world 132
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான உடன்படிக்கை சாத்தியமானது: ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் நம்பிக்கை!

அமெரிக்கா தனது ஆதிக்க மனப்பான்மையைக் கைவிட்டு, ஈரான் தேசத்தின் உரிமைகளை மதித்து நடந்தால், இரு நாடுகளுக்கும்...

world 130
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிலக்கரி டெண்டர் முறைகேடு: சி.ஐ.டி-யில் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் புகார்!

நிலக்கரி ஒப்பந்தப்புள்ளி (Tender) செயல்முறையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரணை...

world 136
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யால தேசியப் பூங்காவில் சட்டவிரோத வேட்டை: 92 கிலோ இறைச்சியுடன் இருவர் கைது!

யால தேசியப் பூங்காவின் 02-ம் மண்டலப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் வனவிலங்குகளை வேட்டையாடி, அவற்றின் இறைச்சியை...