tamilnaadi 142 scaled
சினிமாபொழுதுபோக்கு

நடிகர் விஜய்யை அவமானப்படுத்தினாரா சமந்தா

Share

நடிகர் விஜய்யை அவமானப்படுத்தினாரா சமந்தா

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, தளபதி விஜய்யுடன் இணைந்து இதுவரை மூன்று முறை நடித்துள்ளார். அடுத்ததாக தளபதி 69 படத்திலும் விஜய்யுடன் நடிக்க போகிறார் என கூறப்படுகிறது.

தமிழில் எப்படி சமந்தாவிற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்களோ, அதே போல் தெலுங்கிலும் பல லட்சம் ரசிகர்களை கொண்டுள்ளார். மகேஷ் பாபு, ரவி தேஜா என பல முன்னணி நட்சத்திரங்களுடனும் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், சமந்தா தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி ஒன்றில் தெலுங்கு திரையுலகின் சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு கலந்துகொண்டுள்ளார். அப்போது மகேஷ் பாபுவிடம் உங்களுக்கு எந்த விதமான படங்கள் பிடிக்கும் என சமந்தா கேட்டார். அதற்கு கத்தி போன்ற திரைப்படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறினார்.

இதன்பின், அதை நீங்கள் ரீமேக் செய்து நடிப்பீர்களா என அதன்பின் கேள்வி எழுப்பினார் சமந்தா. இதற்கு, ‘இல்லை நான் ரீமேக் படங்களில் நடிக்கமாட்டேன்’ என கூறினார் மகேஷ் பாபு. அப்போது, நீங்கள் விஜய்யுடைய படங்களை ரீமேக் செய்து நடிக்க மாட்டீர்கள். ஆனால், விஜய் உங்களுடைய படங்களை ரீமேக் செய்து நடிக்கிறார்’ என கூறியுள்ளார்.

இந்த வீடியோவை தற்போது ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள். விஜய்யை அவமானப்படுத்தும் வகையில் சமந்தா பேசியுள்ளார் என விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கூறி வருகிறார்கள். மற்றவர்கள் இது உண்மை தானே என்றும் கூறுகிறார்கள்.

Share
தொடர்புடையது
9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...

7 1
சினிமாசெய்திகள்

சிங்கப்பெண்ணே எதிர்பார்க்காத ட்விஸ்ட்! ஆனந்தி – அன்பு திருமணமா? ப்ரோமோ பாருங்க

சன் டிவியின் டாப் சேரியல்களில் ஒன்றாக இருந்து வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் தற்போது ஆனந்தி தனது...

6 2
சினிமாசெய்திகள்

6 நாட்களில் மார்கன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த...