tamilnib 4 scaled
இலங்கைசெய்திகள்

இளம் பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்த நபர்

Share

இளம் பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்த நபர்

சீதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முத்துவாடிய பகுதியில் வாடகை அறையொன்றில் பெண் ஒருவர் கழுத்தறுக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்றிரவு உயிரிழந்தவர் பலுகொல்லாகம, மெகொடவெவ பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

விசாரணையில், உயிரிழந்த பெண்ணுக்கும், தகாத உறவில் இருந்த நபருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.

இதன் காரணமாக, குறித்த நபர் பெண்ணின் கழுத்தை போத்தல் துண்டு ஒன்றினால் அறுத்து கொலை செய்துள்ளார்.

எனினும் சம்பவத்தின் பின்னர், சந்தேக நபர் அந்த பகுதியை விட்டு தப்பிச் சென்றதாக குறிப்பிடப்படுகின்றது.

நீதவான் விசாரணைக்காக சடலம் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை சீதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
லிட்ரோ 1
இலங்கை

லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் வெளியாகியுள்ள விடயம்.

லிட்ரோ எரிவாயு விலையில் ஓகஸ்ட் மாதத்தில் திருத்தம் மேற்கொள்ளாமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம்...

ester attac 2
இலங்கை

நீதிபதிகளுக்கு அதிகரிக்கப்பட்ட பாதுகாப்பு – வெளியாகியுள்ள முக்கிய பாதுகாப்பு.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான அரசுத் தரப்பு வழக்கில் முக்கிய ஆதாரங்கள் ஆராயப்பட்டு வரும் நிலையில்உடனடியாக நடைமுறைக்கு...

ஹட்டன் கல்வி வலயம்
இலங்கை

ஹட்டன் கல்வி வலயம் வெளியிட்டுள்ள தகவல்.

சீரற்ற வானிலை பாதிப்பை கருத்திற் கொண்டு நேற்று முன்தினம் முதல் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு...

ஹர்ஷ சுரங்க பெர்னாண்டோ
இலங்கை

மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநர் பதவியேற்பு!

ஜனாதிபதி செயலகத்தில், மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற சமூக மருத்துவ நிபுணர் ஹர்ஷ...