உலகம்
விலையுயர்ந்த நகைகளால் செய்யப்பட்ட இஷா அம்பானியின் ஆடை.., எப்படி உருவானது தெரியுமா?
விலையுயர்ந்த நகைகளால் செய்யப்பட்ட இஷா அம்பானியின் ஆடை.., எப்படி உருவானது தெரியுமா?
ஆனந்த் அம்பானி திருமண கொண்டாட்டத்தில் இஷா அம்பானி அணிந்திருந்த விலையுயர்ந்த நகைகளால் செய்யப்பட்ட ஆடை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
Reliance Industries Ltd தலைவரும், நிர்வாக இயக்குனருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு 2023 -ம் ஆண்டு ஜனவரியில் மும்பையில் உள்ள அன்டாலியா இல்லத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர்களின் திருமணம் வருகின்ற ஜூலை 12 -ம் திகதி மும்பையில் நடைபெற உள்ளது.
இந்நிலையில், கடந்த 1 -ம் திகதி குஜராத்தின் ஜாம் நகரில் திருமணத்தின் முந்தய கொண்டாட்டம் தொடங்கியது. இந்த விழாவுக்கு உலக பிரபலங்கள் உள்ளிட்ட 1,000 சிறப்புவிருந்தினர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், திருமணம விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் விலையுயர்ந்த பாரம்பரியமான ஆடையில் வந்தனர். ஆனால், இஷா அம்பானி அணிந்திருந்த ஆடை சற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
அதாவது அவர், வைரம், மரகதம், மாணிக்கக் கற்கள் உள்ளிட்ட பல விலைமதிப்பற்ற கற்கள் அடங்கிய ஜடாவ் நகைகளால் செய்யப்பட்ட ஜாக்கெட்டை அணிந்திருந்தார்.
இது தொடர்பாக ஆடை வடிவமைப்பாளர் அபு ஜானி மற்றும் சந்தீப் கோஸ்லா ஆகியோர் பகிர்ந்துள்ள வீடியோவில், “இஷா அம்பானி ஆடையில் பதிக்கப்பட்ட நகைகள் அவரது தனிப்பட்ட சேகரிப்பில் வந்தவை” என்று கூறியுள்ளனர்.
சிவப்பு துணியை அடித்தளமாக கொண்டு, விலைமதிப்பற்ற ரத்தினக் கற்களால் அலங்கரித்து ஜாக்கெட் தைக்கப்பட்டது. இதனை வடிவமைக்க ஜடாவ் நகைகளை இஷா அம்பானி கொடுத்துள்ளார்.
மேலும் இதில், போல்கி, ரூபி, வைரங்கள், மரகதங்கள் ஆகியவை உள்ளன. இதுபோக, ஆடையில் வைத்து தைப்பதற்காகவே குஜராத் மற்றும் ராஜஸ்தானில் இருந்து நகைகள் பெறப்பட்டன.
முதலில் நகைகளை கைகளால் வரைந்து காகித வடிவங்களில் பேட்டர்ன் செய்யப்பட்டு அதன் பின்பு ஜாக்கெட்டில் பதிக்கப்பட்டன.
பல கலை பரிசோதனைக்கு பிறகு தான் தங்கம் மற்றும் வெள்ளியால் செய்யப்பட்ட சர்தோசி வேலைப்பாடுகளுடன் இஷா அம்பானியின் ஜாக்கெட் வடிவமைக்கப்பட்டுள்ளது.