ஏமனில் மன்சூர் ஹாதி அரச படைகளுக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டு போர் இடம்பெற்று வருகின்றது.
இந்தப் போரில் சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் வான்வழியாகவும் தரைவழியாகவும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தி வருகின்றது.
இந்த நிலையில் மரிப் நகரில் இரு தரப்பும் இடையே ஏற்பட்ட பயங்கர மோதலில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 93 பேர் கொல்லப்பட்டுள்ளது.
அதேபோல் அரச படையினர் 51 பேரும் பலியாகியுள்ளனர்.
இரு தரப்புக்கும் இடையிலான மோதல் அங்கு தொடர்வதால் பதற்ற நிலையும் நீடித்து வருகின்றது.
இந்த நிலையில் ஏமனின் தலைநகரை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி 7 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதனையொட்டியே ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அரச படைகளுக்கு எதிராக தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
Leave a comment