8 3 scaled
இந்தியாஉலகம்செய்திகள்

சீமான் தொடர்ந்த வழக்கில் புதிய திருப்பம்.., நடிகை விஜயலட்சுமிக்கு உத்தரவு போட்ட நீதிமன்றம்

Share

சீமான் தொடர்ந்த வழக்கில் புதிய திருப்பம்.., நடிகை விஜயலட்சுமிக்கு உத்தரவு போட்ட நீதிமன்றம்

சீமான் தாக்கல் செய்த வழக்கில் நடிகை விஜயலட்சுமி ஆஜராக வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சீமான் தன்னை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றினார் என்றும், என்னை அவர் பயன்படுத்திக் கொண்டு கடைசியில் வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என்றும் நடிகை விஜயலட்சுமி கடந்த 2011 -ம் ஆண்டு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

பின்னர், சீமான் தரப்பு பேசியதை தொடர்ந்து அந்த வழக்கை விஜயலட்சுமி வாபஸ் பெற்றார். இந்தப் புகாரின் அடிப்படையில், தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில் அவர், ” வழக்கு முடித்து வைக்கப்பட்ட நிலையில் மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணைக்கு தடைவிதிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கின் விசாரணையின் போது காவல்துறை அறிக்கை தாக்கல் செய்தது. மேலும், விஜயலட்சுமியை செப்டம்பர் 29 -ம் திகதி ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன் பிறகு வழக்கு பட்டியலிடவில்லை

இந்நிலையில், வழக்கின் விசாரணை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு வந்தது. அப்போது, மார்ச் 19 -ம் திகதி விஜயலட்சுமி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று கூறி விசாரணையை தள்ளி வைத்தார். இதனால், நீதிமன்றத்தில் விஜயலட்சுமி ஆஜராகலாம் என்று கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
05 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பண்டிகைக் காலத்தில் இணைய மோசடிகள் அதிகரிப்பு: எச்சரிக்கையுடன் இருக்குமாறு இலங்கை கணினி அவசர பிரிவு அறிவுறுத்தல்!

எதிர்வரும் பண்டிகைக் காலங்களை முன்னிட்டு, இணையத்தில் பகிரப்படும் போலியான விளம்பரங்கள் மற்றும் இணைப்புகள் (Links) மூலம்...

04 12
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் சுற்றுலாத்துறை வளர்ச்சி: 2026-ஆம் ஆண்டில் 600,000 சுற்றுலாப் பயணிகளைக் கடந்த சாதனை!

இலங்கையின் சுற்றுலாத்துறை இந்த ஆண்டின் ஆரம்பத்திலேயே பெரும் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி...

03 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் பல பகுதிகளில் இன்றும் மழை பெய்ய வாய்ப்பு: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

இலங்கையின் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள புதிய வானிலை அறிக்கையின்படி, இன்று (மார்ச் 13) நாட்டின் பல...

02 12
செய்திகள்உலகம்

பனிமலை ஏறும் போது நிலைதடுமாறி சரிந்த மலையேற்ற வீரர்: வைரலாகும் திக் திக் காட்சிகள்

உலகின் மிக உயரமான சிகரங்களை நோக்கிய மலையேற்றப் பயணங்கள் சாகசம் நிறைந்ததாக இருந்தாலும், அவை எந்த...