tamilnaadi 56 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

இலங்கையின் பொருளாதார கொலையாளிகள் ராஜபக்ச குடும்பமே

Share

இலங்கையின் பொருளாதார கொலையாளிகள் ராஜபக்ச குடும்பமே

இலங்கையின் பொருளாதார கொலையாளிகள் ராஜபக்ச குடும்பமே என தேசிய மக்கள் சக்தியின் மத்திய குழு உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் கடுமையாக சாடியுள்ளார்.

சமகால நிலைமை தொடர்பாக யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

”நாதியற்ற நபராக இருந்தவர் வேறு யாரும் இல்லை இந்த பசில் ராசபக்ச. அவரை வரவேற்பதற்காக அனைவரும் விமான நிலையம் சென்றுள்ளனர்.

விமானங்கள் இல்லாது அங்குமிங்கும் ஓடி திரிந்த இந்த நபர் தான் அவர். தமது அரசாங்கம் தோல்வியுற்றதை அறிந்து , நாட்டை விட்டு ஓடியவர் இந்த பசில் ராஜபக்ச.

இவர்கள் வருகையால் எமது நாட்டுக்கு ஒன்றும் ஆகப் போவதில்லை. எமது நாட்டினை நாசமாக்கியவர்கள். இதை நான் கூறவில்லை இந்த நாட்டில் உள்ள உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு காரணம் வேறு யாரும் இல்லை இந்த ராஜபக்ச குடும்பமே.

மேலும், பொருளாதார கொலையாளிகள் வேறு யாரும் இல்லை இந்த குடும்பமே. இவர் கடந்த காலங்களில் விளையாடிய விளையாட்டை இனியும் விளையாட முடியாது. இது பாசில் ராசபக்சவின் கடைசித் தேர்தல் ஆக இருக்கலாம்‘‘ என்றார்.

Share
தொடர்புடையது
03 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் ரூ. 13,000 குறைவு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத்...

25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...