இலங்கை
பொலிஸ் மா அதிபராக கடமைகளைப் பொறுப்பேற்கும் தேசபந்து
பொலிஸ் மா அதிபராக கடமைகளைப் பொறுப்பேற்கும் தேசபந்து
பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் இன்றைய தினம் கடமைகளை அதிகாரபூர்வமாக பொறுப்பேற்றுக்கொள்ள உள்ளார்.
பொலிஸ் மா அதிபராக பதவி உயர்வு பெற்றுக் கொண்ட தேசபந்து தென்னக்கோன் இதுவரையில் வகித்து வந்த மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் பதவிக்கு மகேஸ் சேனாரட்ன நியமிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் பாதாள உலகக் குழு கட்டுப்படுத்தல் நடவடிக்கைகள் தொடரும் என பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
குற்றச் செயல்கள் தொடர்பிலான விசாரணைகளில் இலங்கை பொலிஸார் சிறந்த திறமைகளை வெளிப்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் சர்வதேச அணுகுமுறைகள் பின்பற்றப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.