7 2 scaled
சினிமாசெய்திகள்

நேற்று வெளியான வீடியோ ‘STR 48′ படம் கிடையாதா? ரசிகர்கள் ஏமாற்றம்..!

Share

நேற்று வெளியான வீடியோ ‘STR 48′ படம் கிடையாதா? ரசிகர்கள் ஏமாற்றம்..!

நடிகர் சிம்பு நேற்று தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்ட நிலையில் அந்த வீடியோ அவர் நடிக்க இருக்கும் ‘STR 48′ படத்தின் சம்பந்தப்பட்ட வீடியோ என்று நினைத்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவல் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

நேற்று வெளியான வீடியோ அசத்தலான கிராபிக்ஸ் காட்சிகளுடன் பாகுபலி படத்திற்கு இணையான காட்சிகள் இருந்தது என்று சிம்பு ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். சிம்பு நடிப்பில், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘STR 48′ படத்தின் காட்சிகள் தான் இவை என்றும் கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களிலும் செய்தி வெளியானது.

ஆனால் தற்போது வெளிவந்துள்ள தகவல் படி இந்த வீடியோ அவர் நடித்த விளம்பர படத்தின் வீடியோ என்றும் கிரீன்மேட்டில் உருவாக்கப்பட்ட இந்த வீடியோவில் கிராபிக்ஸ் காட்சிகளை இணைக்கப்பட்டு உள்ளதாகவும் இந்த விளம்பரம் விரைவில் வெளியாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து சிம்பு ரசிகர்கள் கதம் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்த வீடியோ ‘STR 48′ படத்தின் காட்சிகள் என்று நாங்கள் நினைத்துக் கொண்டிருந்த நிலையில் இப்படி ஒரு காட்சி விளம்பர படமா என்பது எங்களுக்கு அதிருப்தி ஏற்படுத்தியதாகவும் ஆனால் அதே நேரத்தில் ‘STR 48′ பட வீடியோவும் சூப்பராக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்றும் சிம்பு ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...