கொழும்பில் தனியார் வைத்தியசாலை ஒன்றின் கழிவறையில் இருந்து கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையில் மற்றுமொரு இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்
திருகோணமலை பகுதியில் வசிக்கும் 22 வயது நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட இந்நபரை தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
நாரஹேன்பிட்டி வைத்தியசாலையிலிருந்து அண்மையில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் திருகோணமலை – உப்புவெளி பகுதியை சேர்ந்த 26 வயது இளைஞர் ஏற்கெனவே கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .
Leave a comment