யாழ். வட்டுக்கோட்டை அராலிப் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் சாரதி உட்பட மூவர் படுகாயம் அடைந்துள்ளனர் என வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வேகக் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து வீதியருகே உள்ள மரத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் நீண்ட போராட்டத்தின் பின் சாரதி மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Leave a comment