tamilni 525 scaled
சினிமாபொழுதுபோக்கு

வெங்கடேஷ் பட்டை தொடர்ந்து குக் வித் கோமாளியில் இருந்து விலகும் பிரபலம்

Share

வெங்கடேஷ் பட்டை தொடர்ந்து குக் வித் கோமாளியில் இருந்து விலகும் பிரபலம்

சமையல் நிகழ்ச்சி என்று வைக்காமல் அதில் புதுமையை புகுத்தி குக் வித் கோமாளி என்ற டைட்டிலோடு கடந்த 2019ம் ஆண்டு தொடங்கப்பட்ட நிகழ்ச்சி குக் வித் கோமாளி.

சமையல் நன்றாக தெரிந்தவர்களுடன், அவர்களுக்கு உதவி செய்ய சுத்தமாக சமையலே தெரியாதவர்கள் கூட்டணி என்ற டிசைனில் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. முதல் சீசனுக்கு கிடைத்த அமோக வரவேற்பு அடுத்தடுத்து 4 சீசன்கள் ஒளிபரப்பானது.

இந்த 4 சீசன்களுக்கு வெங்கடேஷ் பட் மற்றும் தாமு இருவரும் நடுவர்களாக இருந்தார்கள்.

பிக்பாஸ் முடிந்த கையோடு குக் வித் கோமாளி 5வது சீசன் குறித்த பேச்சு தொடங்கியது.

இந்த நேரத்தில் தான் நடுவர்களில் ஒருவரான வெங்கடேஷ் பட் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதாக கூறியிருந்தார். இந்த நிலையில் இன்னொரு நடுவரான தாமு அவர்களும் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருப்பதாக வீடியோ வெளியிட்டுள்ளார்.

வீடியோவில் நானும் வெங்கடேஷ் பட் அவர்களும் இணைந்து ஒரு நிகழ்ச்சியை நடத்த உள்ளோம் என்றும் அந்த நிகழ்ச்சி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எங்கள் இருவரையும் சேர்ந்து அந்த நிகழ்ச்சியில் பார்க்கலாம் என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும் ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் நாங்கள் இருவரும் இல்லை என்று தாமு வீடியோ வெளியிட நாங்கள் கொண்டாடிய இரு நடுவர்களும் இனி இல்லையா என ரசிகர்கள் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகிறார்கள்.

Share
தொடர்புடையது
world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 137
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு: 6 பேர் கைது – சைபர் க்ரைம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக்...

world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...