tamilnaadi 139 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜனாதிபதித் தேர்தலைப் பிற்போட முடியாது

Share

ஜனாதிபதித் தேர்தலைப் பிற்போட முடியாது

ஜனாதிபதித் தேர்தலுடன் விளையாட முடியாது. எனவே, அரசமைப்பின் பிரகாரம் குறித்தொதுக்கப்பட்டுள்ள காலப் பகுதிக்குள் அது நடந்தாக வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது, ஜனாதிபதித் தேர்தலைப் பிற்போடவே முடியாது. இந்த விடயத்தில் எந்த விளையாட்டும் எடுபடாது. எதிர்வரும் செப்டெம்பர், ஒக்டோபரில் தேர்தல் நடத்தப்படும். இதற்கான அழைப்பை தேர்தல் ஆணைக்குழு விடுக்கும்.

தற்போதைய நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையின் கீழேயே தேர்தல் நடக்கும். அதில் மாற்றம் வராது. அதேவேளை, நாட்டில் தற்போதுள்ள நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமைவிட பலமானதொரு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையே நாட்டுக்குத் தேவை என்பது எனது கருத்தாகும்.

இது எனது தனிப்பட்ட கருத்து, கட்சியின் நிலைப்பாடு அல்ல. அப்படியானதொருவர் என நினைத்துத்தான் கோட்டாபய ராஜபக்சவுக்கு வாக்களித்தோம். ஆனால், அது நடக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...