அரசியல்இலங்கைசெய்திகள்

ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைத்தால் ரணிலை விரட்டியே தீருவோம்

Share
tamilni 471 scaled
Share

“ஜனாதிபதித் தேர்தலை தள்ளிப் போடுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்தால் அதற்கு ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்” என ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், “தேர்தலை ஒத்திப்போட நினைத்தால் மக்களுடன் வீதிக்கு இறங்கி ஜனாதிபதி ரணிலை விரட்டியடிப்போம்.

எதிர்வரும் நவம்பர் மாதம் நடுப் பகுதியில் இப்போதுள்ள ஜனாதிபதியின் பதவிக் காலம் முடிகின்றது.

அரசமைப்பின்படி, அதற்கு முன்னதாகவே ஜனாதிபதித் தேர்தலை நடத்தி ஜனாதிபதி ஒருவரைத் தெரிவு செய்ய வேண்டும்.

அந்தத் தேர்தலை ஒத்திப்போடுவதற்கோ அல்லது வேறு ஏதும் சதி செய்வதற்கோ இடம்கொடுக்கமாட்டோம்.” என குறிப்பிட்டுள்ளார்.

Share
Related Articles
2 16
இலங்கைசெய்திகள்

தமிழரசு கட்சி ஆதிக்கம்! யாழ். மாவட்டத்தின் இறுதி முடிவுகள்

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் யாழ். மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன. இதற்கமைய, யாழ்ப்பாண மாநகர...

2 16
இலங்கைசெய்திகள்

கிளிநொச்சியில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி அமோக வெற்றி!

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வெளியாகியுள்ளன. இதற்கமைய பச்சிளைப்பள்ளி பிரதேச...

2 15
இலங்கைசெய்திகள்

கம்பஹா மாவட்டத்தில் பெரும் வெற்றி பெற்ற தேசிய மக்கள் சக்தி

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வெளியாகியுள்ளன. கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள...

2 16
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாவட்டத்தின் இறுதி தேர்தல் முடிவுகள்! அதிக ஆசனங்களை கைப்பற்றிய அநுர தரப்பு

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வெளியாகியுள்ளன. கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள...