சினிமாபொழுதுபோக்கு

அவர் கூட நடிக்க மாட்டேன்.. ஷூட்டிங்கில் ஷகிலாவிடம் அப்படி நடந்துகொண்ட விஐய்!!

Share
tamilnid 7 scaled
Share

அவர் கூட நடிக்க மாட்டேன்.. ஷூட்டிங்கில் ஷகிலாவிடம் அப்படி நடந்துகொண்ட விஐய்!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் தான் நடிகர் விஜய். தற்போது இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் கோட் படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை அடுத்து விஜய் தெலுங்கு இயக்குனர் திரிவிக்ரம் உடன் கூட்டணி வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகை ஷகீலா விஜய் குறித்து பேசியுள்ளார். அதில் அவர், “ஆரம்பக்காலத்தில் விஜய் உடன் நடித்திருக்கிறேன். என்னுடைய தங்கை விஜய்யோடு டான்ஸ் ஆடி இருக்கிறார். அவருடன் நல்ல பழக்கம் இருந்தது. ஆனால் எங்களுக்கு இடையே ஒரு கேப் விழுந்துவிட்டது”

“அதன் பின்னர் விஜய்யுடன் சேர்ந்து அழகிய தமிழ் மகன் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் நான் விஜய் கூட காம்பினேஷன் காட்சியில் நடிக்கமாட்டேன் சொல்லியிருந்தேன். அதற்கு அவர்களும் சரி என்று சொல்லி இருந்தார்கள். ஆனால், முதல் ஷார்ட்டே விஜய்யுடன் தான்”.

“நான் விஜய்யிடம் எப்படி பேசுவது, அவர் நம்மை ஞாபகம் வைத்திருப்பாரா? என்று மனதில் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் விஜய் செட்டுக்கு வந்த உடனே என்னை பார்த்ததும் ‘ஹாய் ஷகி’ என்று சொல்லிக் கொண்டே வந்தார்”.

“மொத்த யூனிட் எங்களை பார்த்தது. விஜய் யாரிடமும் பேசமாட்டார். அமைதியானவர் என்று பலரும் சொல்வார்கள். விஜய் இப்படி பழகுவாரா என்று எனக்கு அப்போதுதான் தெரிந்தது” என்று ஷகீலா கூறியுள்ளார்.

Share
Related Articles
31
சினிமா

சிம்பு-தனுஷுடன் ரொமான்ஸ் செய்ய நான் ரெடி.. பிரபல தொகுப்பாளினி ஒபன் டாக்

ரஜினி-கமல், அஜித்-விஜய் அடுத்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் சிம்பு-தனுஷ். ரசிகர்கள் போட்டிபோட்டுக் கொண்டாலும் அவர்கள் நட்பாக தான்...

35
சினிமா

டிடி-யை உடை மாற்ற சொன்ன நடிகை.. நயன்தாரா தானா? முதல் முறையாக சொன்ன டிடி

தமிழில் பிரபல தொகுப்பாளராகி இருப்பவர் டிடி. அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது என தெரியவேண்டியது...

32
சினிமா

12 பிரபலங்களுடன் டேட்டிங்.. 50 வயதாகியும் திருமணம் செய்துக்கொள்ளாமல் இருக்கும் நடிகை

சினிமாவில் காதல் சர்ச்சையில் சிக்காமல் தப்பித்தது சிலராக மட்டுமே இருக்க முடியும். அதுவும் பாலிவுட் திரையுலகம்...

33
சினிமா

அஜித் ஒரு குட்டி எம்ஜிஆர்.. AK குறித்து மனம் திறந்து பேசிய பிரபலம்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் அஜித். சமீபத்தில் குட் பேட் அக்லி எனும்...