tamilnic 1 scaled
இந்தியாஇலங்கைசெய்திகள்

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை ஆரம்பம்

Share

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை ஆரம்பம்

எதிர்வரும் வாரங்களில் நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை ஆரம்பமாகும் என்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும், தலைமன்னார் மற்றும் ராமேஸ்வரம் இடையே பயணிகள் கப்பல் சேவையை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்திய உயர்ஸ்தானிகர் காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் தலைமன்னார் கடற்பகுதிக்கு விஜயம் செய்த போது, இரு நாடுகளுக்கிடையிலான கப்பல் சேவைகளை துரிதமாக மீள ஆரம்பிக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்துள்ளார்.

உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா பெப்ரவரி 15 முதல் 17 வரை இலங்கையின் வடக்கு மாகாணத்திற்கு தனது முதல் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

இதன் போது அவர் பங்கேற்ற பல்வேறு நிகழ்வுகள், வடக்கு மாகாணத்துடனான இருருதரப்பு உறவுகளை ஆழப்படுத்துவதற்கான இந்தியாவின் உறுதியான அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தியதாக உயர்ஸ்தானிகராலயம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் 2023 ஜூலையில் வெளியிடப்பட்ட இருதரப்பு பொருளாதார பங்காளித்துவ தொலைநோக்கு ஆவணத்தின் மையக் கருப்பொருளான இணைப்பு முயற்சிகளை மேலும் முன்னெடுப்பதற்கு உயர்ஸ்தானிகர் இந்த பயணத்தின்போது விசேட கவனம் செலுத்தியுள்ளார் என்றும் உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
Vijayakanth Viyaskanth SRH IPL 2024 1
செய்திகள்விளையாட்டு

பாகிஸ்தான் இருபதுக்கு 20 முத்தரப்புத் தொடர்: இளம் சுழற்பந்து வீச்சாளர் விஜயகாந்த் வியாஸ்காந்த் இணைவு!

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள இருபதுக்கு 20 முத்தரப்புத் தொடருக்கான இலங்கை தேசிய ஆடவர் அணியில், இளம் சுழற்பந்து...

67e090cde912a.image
உலகம்செய்திகள்

கனடாவின் நகர மண்டபங்களில் பாலஸ்தீனியக் கொடி: இஸ்ரேல் ஆதரவுக் குழுவின் தஃப்சிக் அமைப்பு தடை கோரி நீதிமன்றம் நாடியது!

கனடாவின் பல நகரங்களின் நகர மண்டபங்களில் பாலஸ்தீனியக் கொடிகள் ஏற்றப்பட்டுள்ள நிலையில், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து...