உலகம்
‘இட்லி குரு’ ஹொட்டல் தொழிலதிபர் கைது.., லட்சக்கணக்கில் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு
‘இட்லி குரு’ ஹொட்டல் தொழிலதிபர் கைது.., லட்சக்கணக்கில் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு
பண மோசடி செய்த ‘இட்லி குரு’ ஹொட்டல் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் பல்வேறு இடங்களில் ‘இட்லி குரு’ என்ற பெயரில் தொழிலதிபர் கார்த்திக் ஷெட்டியும், அவரது மனைவி மஞ்சுளாவும் ஹொட்டல் நடத்தி வருகின்றனர். இவர்கள், தங்கள் ஹொட்டலில் முதலீடு செய்தால் லாபம் பெறலாம் என்று விளம்பரம் செய்திருந்தனர்.
இதனை நம்பி, கடந்த 2022 -ம் ஆண்டு ஓக்டோபர் மாதம் மாகடி பிரதான சாலையின், கொட்டிகே பாளையாவில் உள்ள, ‘இட்லி குரு’ அலுவலகத்துக்கு முதலீடு செய்ய விரும்புவதாக சேத்தன் என்பவர் கூறினார்.
பின்னர், இவரிடம் இருந்து ரூ.3 லட்சத்தை பெற்றுக் கொண்ட தம்பதியினர், மாதம் ரூ.50,000 வரை சம்பாதிக்கலாம் என்று கூறினர். மேலும், இட்லி குரு ஹொட்டல் நடத்த இடம் கொடுத்தால் கூடுதலாக சம்பாதிக்கலாம் எனவும் கூறியுள்ளனர்.
இதன் பின், சேத்தனும் தனது வீட்டின் கீழ் தளத்தில் உள்ள இடத்தை காலி செய்ய சொல்லி, அந்த இடத்தை அவர்களிடம் கொடுத்தார்.
நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் மறுப்பு? இந்த கட்சிக்கு ஒதுக்கீடு செய்திருப்பதால் சிக்கல்
நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் மறுப்பு? இந்த கட்சிக்கு ஒதுக்கீடு செய்திருப்பதால் சிக்கல்
ஆனால், அவர்கள் ஹொட்டல் திறப்பதற்கு பதில், மொபைல் உணவகம் திறந்து வியாபாரத்தை துவங்கினர். ஆனால், அதுவும் சரியாக நடைபெறவில்லை. இதனால், வேறு இடத்தில் ஹொட்டல் திறந்து 10 சதவீதம் கமிஷன் தருவதாக சேத்தனிடம் கார்த்திக் ஷெட்டி கூறியுள்ளார்.
இதனால் தான் கொடுத்த ரூ.3 லட்சம் பணத்தை அவர்களிடம் சேத்தன் தரும்படி கேட்டார். ஆனால், பணத்தை தர மறுத்த தம்பதியினர் கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இதன் பின்னர், இந்த விவகாரம் குறித்து சேத்தன் விசாரித்த போது பல பேரிடம் மோசடி நடத்தியது தெரியவந்தது.
இதனையடுத்து, அவர் பொலிஸாரிடம் தம்பதியினர் குறித்து புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விசாரணை நடத்தினர். இதனை அறிந்ததும் தம்பதியினர் மும்பைக்கு சென்று தலைமறைவாகினர்.
இவர்களை நேற்று காலை மும்பையில் தேடி கண்டுபிடித்த பொலிஸார் கைது செய்து பெங்களூருவுக்கு அழைத்து வந்தனர்.