asianet news 2024 02 14t170211
இந்தியாசெய்திகள்

சைதை துரைசாமி மகன் மறைவு.., நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று ஆறுதல்

Share

சைதை துரைசாமி மகன் மறைவு.., நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று ஆறுதல்

சைதை துரைசாமி மகன் வெற்றி துரைசாமி மறைவையொட்டி, அவருக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.

சென்னை முன்னாள் மேயரும், அதிமுகவைச் சேர்ந்த முக்கிய பிரமுகருமான சைதை துரைசாமியின் மகன், இமாச்சல பிரதேசத்திற்கு சுற்றுலா சென்ற போது அவர் பயணித்த கார் கடந்த வாரம் சட்லஜ் நதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

அதில் கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து மீட்கப்பட்டார். அவரது நண்பர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 8 நாட்களுக்கு பிறகு வெற்றி துரைசாமியின் உடல் சடலமாக மீட்டெடுக்கப்பட்டது.

இதையடுத்து, நேற்று விமானம் மூலம் வெற்றி துரைசாமியின் உடல் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. பின்பு, நேற்று (பிப் -13) மாலை இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்டு அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

வெற்றி துரைசாமி மறைவுக்கு சைதை துரைசாமியை நேரில் சந்தித்து பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் சைதை துரைசாமியை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களும் தற்போது வெளியாகியுள்ளன.

Share
தொடர்புடையது
Untitled 27
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சன்ரைசர்ஸை வீழ்த்தி நடப்பு சாம்பியன் பெங்களூரு அணி அபார வெற்றி!

ஐபிஎல் 2026 தொடரின் தொடக்க ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி,...

Untitled 26
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின்சாரக் கட்டணத் திருத்தம்: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இறுதி முடிவு நாளை!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதிக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த தனது...

Untitled 25
உலகம்செய்திகள்

ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய ஏஐ இரகசியங்கள் கசிவு: சைபர் பாதுகாப்பு நிறுவனங்களுக்குப் பெரும் சவால்!

உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனமான ஆந்த்ரோபிக் (Anthropic), உருவாக்கி வரும் தனது அடுத்த...

01 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீன ஆய்வுக்கப்பல் ஊழியருக்கு அவசர சிகிச்சை: மனிதாபிமான அடிப்படையில் உதவிய இலங்கை கடற்படை!

இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) நங்கூரமிட்டிருந்த சீன ஆய்வுக்கப்பலான ‘ஷி யான் 6’ (Shi...