tamilni 193 scaled
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் தேர்தலில் எதிர்பாராத முடிவுகள்., இம்ரான் கான் ஆதரவு சுயேச்சைகள் முன்னிலை

Share

பாகிஸ்தான் தேர்தலில் எதிர்பாராத முடிவுகள்., இம்ரான் கான் ஆதரவு சுயேச்சைகள் முன்னிலை

பாகிஸ்தான் தேசிய சட்டசபை தேர்தலில் எதிர்பாராத முடிவுகள் வர வாய்ப்புகள் உள்ளன.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.

சுயேட்சைகள் ஆச்சர்யப்படும் வகையில் எழுச்சி பெறுவதாக உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன.

இம்ரானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இன்சாப் கட்சி (Pakistan Tehreek-e-Insaf) சில இடங்களில் போட்டியிடவில்லை. ஆனால் அக்கட்சியின் ஆதரவுடன் சுயேச்சைகள் முன்னிலை வகிக்கின்றனர்.

பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் இதுவரை 13 முடிவுகளை அறிவித்துள்ளது. அதில், ஐந்து இடங்களில் இம்ரான் ஆதரவாளர்கள் வெற்றி பெற்றனர்.

நவாஸ் ஷெரீப்பின் Pakistan Muslim League (N) கட்சி நான்கு இடங்களிலும், Pakistan Peoples Party (PPP) நான்கு இடங்களிலும் வெற்றி பெற்றன.

நாடு முழுவதும் மொத்தம் 266 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. 134 இடங்களில் வெற்றி பெற்ற கட்சி பாகிஸ்தானில் ஆட்சி அமைக்கும்.

60 இடங்கள் பெண்களுக்கும், பத்து இடங்கள் சிறுபான்மையினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் சட்டசபையில் 296 இடங்களும், சிந்து சட்டசபையில் 130 இடங்களும், கைபர் பக்துன்க்வாவில் 113 இடங்களும், பலுசிஸ்தானில் 51 இடங்களும் அறிவிக்கப்பட உள்ளன.

Share
தொடர்புடையது
11 1
செய்திகள்உலகம்

மார்ச் 3-இல் தோன்றும் ‘இரத்த நிலவு’: 58 நிமிடங்கள் நீடிக்கும் 2026-இன் முதல் சந்திர கிரகணம்!

2026 ஆம் ஆண்டின் முதலாவது சந்திர கிரகணம் எதிர்வரும் மார்ச் 3-ஆம் திகதி நிகழவுள்ளதாக சர்வதேச...

goldsteal cleanup
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலவாக்கலையில் நூதனத் திருட்டு – சிசிடிவி காட்சி வெளியீடு!

தலவாக்கலை பிரதான நகரில் அமைந்துள்ள பிரபல நகைக்கடை ஒன்றில், நேற்று (24) பகல் வேளையில் வாடிக்கையாளர்...

10 1
செய்திகள்உலகம்

கால்பந்து மைதானம் அளவுள்ள பிரம்மாண்ட பவளம்! கிரேட் பேரியர் ரீஃபில் தாய்-மகள் குழுவின் வரலாற்றுச் சாதனை.

ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில், இதுவரை ஆவணப்படுத்தப்பட்டவற்றிலேயே உலகின் மிகப்பெரிய பவளக் காலனியை...

09 1
செய்திகள்அரசியல்இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் பின்னணி: முன்னாள் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சலே அதிரடி கைது – 72 மணிநேரத் தடுப்புக் காவல்!

இலங்கை வரலாற்றில் மிகக் கொடூரமான தாக்குதலான 2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில், முன்னாள்...