கிளிநொச்சியில் கைதுசெய்யப்பட்ட 18 வர்த்தகர்களுக்கு உத்தரவு
கிளிநொச்சியில் கடந்த ஜனவரி மாதத்தில் கைது செய்யப்பட்ட 18 வர்த்தகர்களுக்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு குற்றாச்சாட்டுகளுக்கு ஏற்ப 18 பேருக்கும் தொகை வேறுபட்டதுடன் மொத்தமாக ஒரு இலட்சத்து 69 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கடந்த ஜனவரி மாதம் நுகர்வோர் அபிவிருத்தி அதிகார சபையினால் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன்போது அதி கூடிய விலைகளில் பொருட்களை விற்பனை செய்தமை, விற்பனைக்காக காட்சிப்படுத்தியமை, காலாவதியான பொருட்களை விற்பனை செய்தமை, விலை மாற்றம் செய்து விற்பனை செய்தமை என பல்வேறு குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்ட 18 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
Comments are closed.